9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம்;பாடம் 1 ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் இந்திய ஆதிக்கம்(பக்சார் போர் பிளாசிப்போர்) TNPSC TET TRB PREPARATION GUIDE

9ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம்;

TNPSC TET TRB PREPARATION GUIDE


பாடம் 1 ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் இந்திய ஆதிக்கம்(பக்சார் போர் பிளாசிப்போர்)


மதிப்பீடு(விடைகள்)

1)பிளாசிப் போர்;(1757)


*பிளாசிப்போரானது சிராஜ்-உத்-தௌலா,பிரெஞ்சு கூட்டணிக்கும் மற்றும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1757 ஜூன் 23ம் நாள் நடைபெற்றது.இப்போரில் சிராஜ்-உத்-தௌலாவின் படைகளை இராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் தோற்கடித்தன


2)பக்சார் போர்;(1764)


*1764 ஆம் ஆண்டு அக்டோபர் 22ல் பாட்னா அருகிலுள்ள பக்சார் என்ற சிறிய நகரில் நடைபெற்ற போரில் சுஜா-உத்-தௌலா,இரண்டாம் ஷா ஆலம்,மீர்காசிம் ஆகியோர் ஆங்கிலப்படைத் தளபதி ஹெக்டர் மன்றோ-வால் தோற்கடிக்கப்பட்டனர்.

*இது இங்கிலாந்தின் தீர்க்கமான வெற்றியாக அமைந்தது

2)வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களை ஜஹாங்கீர் அனுமதி மறுத்திருந்தால்,

*ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி பெற சில காலங்கள் ஆகி இருக்கும்

*ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்து இருக்க மாட்டார்கள் என்று கூற முடியாது
 
*பலவீனமான சில அரசர்களால் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நுழைவது நடந்து இருக்கும் 

*இந்தியாவிற்கும் வாணிபத் தேவை இருந்தது

4)(i) ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடித்தளமிட்ட போர் - பிளாசிப் போர்(1757)

(ii) ஆங்கிலேயர்களுக்கு திவானி உரிமை பெற்றுத் தந்த போர் - பக்சார் போர்(1764)


3 வதுகேள்வி விடை 📌 click link







No comments

Powered by Blogger.