கணித மேதைகள்
ஸ்ரீனிவாச ராமானுஜம்
அறிமுகம்:-
*நாம் இன்று கற்கும் கணிதம் நம் முன்னோர்களான பல்வேறு கணித மேதைகள் நமக்கு அளித்த பெரும் கொடையாகும்.
*கணித மேதைகளில் நம் தமிழ்நாட்டில் பிறந்து புகழின் உச்சிக்கே சென்றார் ஒருவர்.
பிறப்பு:-
*நம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் டிசம்பர் 22 - 1887-ம் ஆண்டு, சீனிவாச அய்யங்கார், கோமளத்தம்மாள் தம்பதி தவமாய் தவமிருந்து பெற்ற வரம் தான் ராமானுஜம்.
*குடும்ப சூழ்நிலை காரணமாக ஈரோட்டில் இருந்து காஞ்சிபுரம் இடம்பெயர்ந்தது ராமானுஜத்தின் குடும்பம்.
ஆரம்பக் கல்வி:-
*1892 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த திண்ணைப்பள்ளி ஒன்றில் தொடக்க கல்வியை பெற தொடங்கினார்.
*சிறுவயதிலேயே கணிதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் ராமானுஜம்.
1897-ல் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக் கல்வியை நிறைவு செய்தார்.
*1897 இல் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
பட்டப்படிப்பு:-
*கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும் சென்னை பச்சையப்பா கல்லூரி யிலும் தனது பட்டப்படிப்பை பெற்றார். மூன்று முறை ஆங்கில பாடத்தில் தோல்வியுற்றார்.
*பின்பு கணிதத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தேற்றங்களை எழுதி தெறிக்கவிட்டார்.
நூல்களும், கட்டுரைகளும்:-
*ஒவ்வொரு நாளும் தனது கணித குறிப்புகளை சூத்திரங்களை அவர் தாள்களில் எழுதி வைத்தார். அதுவே பிற்காலத்தில் ராமானுஜம் கணிதம் என்ற புகழ்பெற்ற நூலானது.
*1909 இல் திருமணம் ஆனது. வேலைக்கு சென்று கொண்டே 'பெர்நெவுசியன் எண்கள்' என்ற கணிதத் துறை பற்றிய சிறப்பு கட்டுரையை வெளியிட்டார்.
*இதை அறிந்த சென்னை துறைமுக கழக பொறுப்புத் தலைவர் 'ஸ்பிரிங்' என்ற ஆங்கிலேயர் கணித குறிப்புகளை இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார்.
*இதைப் படித்து வியந்த பல்கலைக்கழக பேராசிரியர் 'ஹார்டி' என்பவர் இங்கிலாந்து வரும்படி இராமானுஜருக்கு அழைப்பு விடுத்தார்.
UK - இல் தமிழின் புகழ்:-
*1914-ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து சென்று பல கணித மேதைகளுடன் உரையாடினார்.
1729 என்பது ராமானுஜ எண் எனப்படுகிறது.
*பிறகு டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். அப்போது மூன்று ஆண்டுகளில் 32 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி தமிழகத்தை உலக அளவில் தலைநிமிர செய்தார்.
இங்கிலாந்து பதவிகள்:-
*அவரை ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்து எடுத்து பெருமைப்படுத்தியது இங்கிலாந்து.
*பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஃபெல்லோஷிப் பதவியும் அவருக்கு கிட்டியது.
புகழ்கள்:-
*ஜெர்மனி ஸ்வீடன் போன்ற நாடுகள் ஆண்டு முழுவதும் கணிதமேதை ராமானுஜம் என்ற பெயரில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும் மாநாட்டை நடத்துகின்றன.
*ராமானுஜன் மிகச் சிறந்த கணித மேதை என பல அயல்நாட்டு மேதைகள் புகழ்கின்றனர்.
*2012ஆம் ஆண்டு இராமானுஜர் 125வது பிறந்த ஆண்டையொட்டி அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும் அவர் பிறந்த தினமான டிசம்பர் 22 தேசிய கணித தினமாக அறிவித்தது நடுவண் அரசு.
நினைவுகள்:-
*1971 ஆம் ஆண்டு பேராசிரியர் ராமானுஜம் அனைத்து உலக நினைவு குழு சென்னையில் அமைக்கப்பட்டது.
*சென்னையில் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் நாள் ராமானுஜன் கணித அறிவியல் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
*சென்னை துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர் கப்பலுக்கு ராமானுஜம் பெயர் சூட்டப்பட்டது.
முடிவுரை:-
*தனது 33-ம் வயதில் காலன் அவரை கவர்ந்து சென்றாலும்,
* குறுகிய காலத்தில் கணிதமேதை ராமானுஜம் புகழ் காலத்தை வென்று சரித்திரம் படைத்து இருக்கிறது.
அருமை பதிவு
ReplyDelete