பாபநாசம் அணையின் கொள்ளளவு

பாபநாசம் அணையின் கொள்ளளவு

அறிமுகம்:-

             பாபநாசம் அணை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இந்த அணை திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அணையாகும்.



தோற்றம்:-

       *பாபநாசம் மலையில் ஆங்கிலேயர் காலத்தில் கி.பி 1942ல் இந்த அணை கட்டப்பட்டது.

      *'தாமிரபரணி ஆறு'அணை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு இரண்டு அணைகள் உள்ளன.

     *மேல் அணைக்கு, காரையார் அணை என்றும் கீழ் அணைக்கு, பாபநாசம் அணை என்றும் சொல்வர்.

அமைப்பு:-

    *இந்த அணை 1942இல் திறக்கப்பட்டது. பாபநாசம் அணையில் 143 அடி வரை நீரை தேக்க முடியும். அணையின் கொள்ளளவு ஐயாயிரத்து ஐநூறு 5500 மில்லியன் கன அடி.


   உயரம் 143 ft அடி (44 மீ)

   நீளம் 744 ft அடி (227மீ)

உயரம் (Foundation 200 Ft - 61 மீ)

👉மொத்தம் Capacity 5.5×10^9 cu ft 

(126,263 acre ஏக்கர் )

👉புவியியல் ஆள்கூற்று 8.712°N 77.393°E

பயன்கள்:-

    *இவ்வணையிலிருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 'தாமிரபரணி' ஆறு பாய்கிறது.

    *மேலும் திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் விருதுநகர்,தென்காசி மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

மின் உற்பத்தி:-

    *பாபநாசம் அணையில் புனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.இது 1944ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் இயக்கப்படுகிறது.


    *புனல் மின்நிலையம் 28 மெகாவாட் திறன் கொண்டது. இதில் 4 ஃபிரான்சிஸ் விசையாழி மின்னாக்கிகள் உள்ளன.

சுற்றுலா:-



   ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் அகஸ்தியர் அருவி, பாபநாசம் படகு சவாரி, தாமிரபரணி ஆற்றில் உற்சாக குளியல் போன்றவை சுற்றுலா வாகும்.

முடிவுரை:-

    இயற்கை நமக்கு அளித்த கொடை பாபநாசம் அணை.பல ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி, 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவை, அதிக மின் உற்பத்தி கொண்ட பாபநாசம் அணையை என்றும் காப்போம்.

No comments

Powered by Blogger.