கருப்பு பூஞ்சை:- (Black fungus) அறிமுகம்,அறிகுறிகள்.
பூஞ்சை:-(Fungus)
*பூஞ்சை என்பது பச்சையம் இல்லாத ஒரு தாவரமாகும்.
எடுத்துக்காட்டு காளான்.
*பூஞ்சைகளில் நன்மை தரும் பூஞ்சைகள் தீமை தரும் பூஞ்சைகள் உள்ளன. தீமை தரும் ஒரு வகைப் பூஞ்சை தான் கருப்பு பூஞ்சை எனப்படுகிறது.
*இப்பூஞ்சை மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கருப்பு பூஞ்சை:- (Black fungus)
*அழுகிய பழங்கள் இறந்த விலங்குகளின் உடல்கள் என்று பல இடங்களில் இந்த கருப்பு பூஞ்சை காணப்படும்.
*ஒரு குழுவாக காணப்படக்கூடிய அச்சு வடிவிலான பூஞ்சைகளின் தொகுப்புதான் 'மியூக்கர் மைக்கோசிங்' என்று அழைக்கப்படுகிறது.
பாதிப்பு:-
*மனிதனின் கண்கள் மூளையை இந்நோய் தாக்குகிறது.
நோய் வர காரணம்:-
*எதிர்ப்பு சக்தி குறைவும், ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவும் இந்நோய் ஏற்பட முக்கிய காரணம் ஆகும்.
அறிகுறிகள்:-
*கண் சிவத்தல், கண்ணை சுற்றி நிறம் மாறுதல், கண்பார்வை இழப்பு, மூக்கில் நீர்வடிதல் அல்லது இரத்தம் வடிதல், அதிகமான தலை வலி ஆகியவை கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள்.
தடுப்பது எப்படி?:-
* ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது.
*சிறு அறிகுறி தெரிந்தவுடன் 'டாக்டரை' அணுகுவது.
No comments