144 தடை உத்தரவு என்றால் என்ன
144 தடை உத்தரவு என்றால் என்ன?
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 144-ஆவது பிரிவே, 144 தடை உத்தரவு என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.
144 சொல்வது என்ன?
*இந்த சட்டப்பிரிவின் படி பொதுமக்கள், நான்கு அல்லது அதற்கு மேலானோர், பொது இடத்திலோ, மக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியிலோ கூடுவது குற்றமாக கருதப்படும்.
*144 தடை உத்தரவின் நீடித்த நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை குறிப்பிடலாம்.
*144 தடை ஊரடங்கு உத்தரவு இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றாலும் சூழ்நிலை நேரம் காலத்துக்கு தக்கவாறு நடவடிக்கையின் தன்மை அமையும்.
எப்பொழுது பிறப்பிக்கப்படும்?
அது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், சுகாதார சீர்கேடு அதிகம் இருந்தாலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது வழக்கம்.
யார் யார் உத்தரவு பிறப்பிக்கலாம்?
144 தடை உத்தரவை, மத்திய மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர், மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள் உள்ளிட்டோர் பிறப்பிக்கலாம்
மீறினால் என்ன தண்டனை?
தடை உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளை மீறினால், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க முடியும்.
No comments