தடுப்பூசி என்றால் என்ன?கோவிஷுல்டு, கோவாக்சின் (கொரோனா தடுப்பு மருந்துகள்)
தடுப்பு ஊசி - உயிர் காக்கும்
மனித உடலின் அமைப்பு:-
*நமது உடல் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி பெற்றது. நோய் எதிர்ப்பு பொருளாக இரத்தத்தில் உள்ள 'வெள்ளை அணுக்கள்' செயல்படுகிறது.
*ஒரு முறை நமது உடலுக்குள் ஒரு வேண்டாத கிருமி(வைரஸ், பாக்டீரியா) வருமாயின், நமது உடலிலுள்ள 'நோய் எதிர்ப்பாற்றல்'உடனடியாக அந்த கிருமியை அழிக்க போராட ஆரம்பிக்கும்.
*அப்படிப் போராடி அக்கிருமியை வென்று விட்டால் அடுத்த முறையும் அதே கிருமி வருமாயின் அது எப்படி வீழ்த்த வேண்டும் என்பதை எதிர்ப்பாற்றல் நினைவில் வைத்துக் கொண்டு அதை எளிதில் வென்றுவிடும்.
தடுப்பூசி என்றால் என்ன?
*எதிர்காலத்தில் இது போன்ற ஒரு கிருமி வந்தால் அதை எப்படி வீழ்த்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள நமது 'நோய் எதிர்ப்பாற்றலுக்கு' முன்கூட்டியே கொடுக்கப்படும் ஒரு பயிற்சிதான் "தடுப்பூசி" அல்லது "தடுப்பு மருந்து" ஆகும்.
குறிப்பு:-
*தடுப்பு ஊசி, அல்லது தடுப்பு மருந்துகள் "நோய்க்கிருமி" உடலினுள் வருவதை தடுக்கமுடியாது. 'நோய்க்கிருமி' உள்ளே வந்தால் அதை எதிர்த்து எளிதில் வென்றுவிடும்.
எ.கா:-
கோவிஷுல்டு, கோவாக்சின் (கொரோனா தடுப்பு மருந்துகள்)
எப்படி தடுப்பூசி வேலை செய்கிறது?:-
*உதாரணமாக உண்மையான ஒரு கொரானா வைரஸை பிடித்து அதன் வீரியத்தை குறைத்து, (அல்லது கொரோனா போன்ற அமைப்புடைய (சுற்றி முள் போன்ற) ஒரு வைரஸை) உடலில் செலுத்தி விடுவார்கள்.
*நமது நோய் எதிர்ப்பாற்றல் உடனடியாக வைரஸை வீழ்த்த அதனுடன் போராட ஆரம்பிக்கும். (வீரியம் உள்ளதா இல்லையா என பார்க்காது).
*வைரஸை வீழ்த்தி, எதிர்காலத்தில் அவை உடலுக்குள் வந்தால் அதனை எப்படி வீழ்த்த வேண்டும் என நினைவில் வைத்துக் கொள்ளும்.
*மனித உடல் இவ்வாறாகவே படைக்கப்பட்டுள்ளது.
கோவிஷுல்டு:-(சீரம் நிறுவனம், புனே)
*சக்தி இழந்த 'ஜலதோஷம்' உண்டாக்கக்கூடிய ஒரு வைரஸை பிடித்து போன்று (சுற்றி முள் போன்ற அமைப்பு) உடலினுள் செலுத்தித் எதிர்ப்பாற்றலை உண்டாக்குவது தான் கோவிஷுல்டு தடுப்பூசி.
*கொரானா வைரஸ் போன்று பல ஒற்றுமை உடைய இந்த வைரஸ் "சிம்பன்சி" குரங்குகளிடம் இருந்து எடுக்கப்படுகிறது.
*எதிர்காலத்தில் உண்மையான கொரானா வைரஸ் உடலில் வந்தால் "கோவிஷுல்டு"அதனை எளிதில் வென்று உடலை காக்கும்.
கோவாக்சின்:-(பாரத் பயோடெக், ஹைதராபாத்)
*உண்மையான ஓர் கொரானா வைரஸை பிடித்து அதன் வீரியத்தை குறைத்து உடலில் செலுத்துவார்கள். அவை நமது நோய் எதிர்ப்பாற்றலுடன் சண்டையிடும்.ஆனால் பாதிப்பு வராது.
*நமது நோய் எதிர்ப்பாற்றல் அவ் வைரஸை வென்று,எதிர் காலத்தில் அவை உடலின் நோய் வந்தால் அவற்றை எவ்வாறு வீழ்த்த வேண்டும் என்ற பார்முலாவை(formula) நினைவில் வைத்துக் கொள்ளும்.
குறிப்பு:-
*கோவாக்சின்,கோவிஷீல்டு இரண்டுமே மிகச் சிறந்த தடுப்பூசிகள்.
*தடுப்பு ஊசிகள் மனித இனத்தை காக்கும்.
No comments