தமிழ்மொழியின் தனித்தன்மை
தமிழ்மொழியின் தனித்தன்மை
முன்னுரை:-
தமக்குத் தோன்றிய கருத்துக்களைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி மொழியாகும்.உலகில் உள்ள மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது தமிழ் மொழி.
தமிழ் மொழி:-
தமிழ்மொழி பல சிறப்புகளையும், தனக்கென தனித்தன்மை வாய்ந்த இலக்கிய வளமும் உடையது.உள்ளத்தில் தோன்றிய ஒரு கருத்தை வெளிப்படுத்த உலகின் சிறந்த மொழி தமிழ் மொழியேயாகும்.
தொன்மை:-
"கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி" தமிழ் மொழியாகும்.
இலக்கண இலக்கிய வளம்:-
¶தொல்காப்பியம் என்ற தமிழில் உருவான, முதல் இலக்கண நூலில் தமிழின் இலக்கண வளத்தை நன்கு அறியலாம்.
¶திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் தமிழ் இலக்கிய வளத்தை அறியலாம்.
தனித்தியங்கும் மொழி:-
¶தமிழ் மொழி தனக்கென தனித்த இலக்கிய வளத்தை பெற்று தனித்து இயங்கும் மொழியாகும்.
¶பிறமொழி கலப்பில்லாமல் தனித்தியங்கும் சிறப்பு பெற்றது.
சொல் வளம்:-
ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் அமைந்த சொல் வளமும், சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழாகும்.
தனித்தன்மை:-
¶இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளிலும் பேசப்படும் பெருமையுடையது தமிழ் மொழி.
¶இந்தியாவின் 'தொன்மையான கல்வெட்டுகள்' பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
முடிவுரை:-
எத்தகைய காலமாற்றத்திலும், எல்லா புதுமைகளுக்கும், ஈடுகொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.தமிழாய்ந்த அயல்நாட்டு அறிஞரும் செம்மொழித் தமிழின் சிறப்பை தரணியெங்கும் எடுத்துரைத்து மகிழ்கின்றனர்.
வாழ்க தமிழ்...
வளர்க தமிழ்...
No comments