ஜிகா வைரஸ்
ஜிகா வைரஸ்
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஒரு வகை வைரஸ்.
ஜிகா வைரஸ் பிறப்பிடம்:-
உகாண்டா நாட்டில் 1947-ஆம் ஆண்டு குரங்குகளிடம் இந்த வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் 1952 -இல் உகாண்டா மற்றும் தான்சானியா நாடுகளில் மனிதர்களிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
தொற்று நோய்:-
கடந்த 1960 முதல் 1980 வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த வைரஸ் 2007க்கு பிறகு தொற்று நோயாக உருவெடுத்தது.
2015இல் பிரேசிலில் பலமுறை இந்த தொற்று பரவியது. தற்போது 86 நாடுகளில் ( 2021 வரை ) இந்த வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.
பரவும் முறை:-
ஏடிஸ் என்ற கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.
அறிகுறிகள்:-
பெரும்பாலும் இத்தொற்று பாதித்த பலருக்கும் அறிகுறிகள் தென்படாது.
தொற்று பாதித்தவர்களுக்கு லேசான காய்ச்சல், தோல் தடிமன், தசை, மூட்டு வலி, கண் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு மூளை மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்படும்.
காலம்:-
தொற்று பரப்பும் கொசு கடித்த 2 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும்.
பாதிப்பு:-
தொற்று பாதித்தவர்கள் பெரும்பாலும் குணமடைய வாய்ப்பு உண்டு. கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
தடுக்கும் முறை:-
ஏடிஸ் கொசுக்கள் நன்னீரில் தான் முட்டையிடும்.எனவே வீடுகளில், மற்றும் சுற்றுப்புறங்களில் சுத்தமான நீர், மற்றும் மழைநீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குளிர்சாதன பெட்டியின் பின்புறம் நீர் சேரும் இடத்தை நன்கு கவனிக்கவேண்டும். (ஒரு சிறு சோப்பு துண்டை அதனுள் போடுவது நல்லது).
தடுப்பூசி:-
இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசிகள் இன்னும் ஆய்வு கட்டத்திலேயே உள்ளன.எனவே கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதே வைரசை தடுக்கும் சிறந்த வழிமுறையாகும்.
நல்ல சமுதாயமே நல்ல வாழ்க்கைக்கு ஆதாரம். நாம்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
No comments