GT Questions & Answers பொதுத்தமிழ் - சிற்றிலக்கியங்கள்
GT Questions & Answers
பொதுத்தமிழ் - சிற்றிலக்கியங்கள்
1. குழவி மருங்கினும் கிழவதாகும் என்ற தொல்காப்பிய இலக்கணத்தால் சுட்டப்படும் சிற்றிலக்கிய வகை? - பிள்ளைத்தமிழ்
2. சாம, பேத, தான, தாண்டம் என்ற நான்கும் அமையப்பாடும் பிள்ளைப்பருவம் எது? - அம்புலி
3. முதல் பிள்ளைத்தமிழ் நு}ல் எது? - குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
4. பக்திசுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நு}ல்? - சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
5. காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் நு}லின் ஆசிரியர்? - அழகிய சொக்கநாதர்
6. அகத்தூதில் அஃறிணைப் பொருளையும் தூது அனுப்பலாம் எனக் கூறும் நு}ல்? - இலக்கண விளக்கப் பாட்டியல்
7. தசவிடுதூது பாடியவர் யார்? - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
8. இராமாயணத்தில் இராமன் சீதைக்கு அனுப்பிய அனுமன் தூது? - அகத்தூது
9. நளவெண்பாவில் நளன் தமயந்திக்கு தூதாக அனுப்பியது? - எகினம்
10. இராமன் இராவணனிடம் அனுப்பியது? - அங்கதன் தூது
11. முதல் தூது நு}ல் எது? - நெஞ்சுவிடு தூது
12. இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் - இவ்வரிகளை பாடியவர் யார்? - எவருமில்லை
13. பெண்பாற் கைக்கிளை என்றழைக்கப்படும் சிற்றிலக்கியம் எது? - உலா
14. முதல் உலா நு}ல் எது? - திருக்கைலாய ஞான உலா
15. உலா பாடுவதில் சிறந்தவர் யார்? - ஒட்டக்கூத்தர்
No comments