TAMIL ILAKKANAM - Shortcut !! பொதுத்தமிழ் - இலக்கணம் இலக்கண குறிப்பறிதல்!!!

 TAMIL ILAKKANAM - Shortcut !!

பொதுத்தமிழ் - இலக்கணம் 



இலக்கண குறிப்பறிதல்!!! 


வினைத்தொகை:

💥வினைத்தொகையில் இரு சொற்கள் இருக்கும்.


💥முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும்.


💥இரண்டாவதாக இருக்கும் சொல் பெயர்ச் சொல்லாக இருக்கும்.


💥மேலும் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களும் இரு சொற்களுக்கு இடையில் மறைந்து வரும்.


எ.கா:

💠பொங்குகடல்

💠பொங்குகின்ற கடல் - நிகழ்காலம் 

💠பொங்கிய கடல் - இறந்த காலம்

💠பொங்கும் கடல் - எதிர்காலம்


உவமைத்தொகை

💥உவமைத் தொகை என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். 


💥கொடுக்கப்பட்ட இரு சொற்களில் முதற்சொல் உவமைச் சொல்லாக இருக்கும்.


எ.கா:

💠கல்திரள் தோள் 


💥இரண்டு சொல்லிற்கு இடையே போல என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளது.


💥அதாவது கல்திரள் போன்ற தோள்களை உடையவர் என்ற பொருளில் அமைந்து காணப்படுகிறது. 


💥இவ்வாறாக உவம உருபுகளில் ஏதாவது ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.


💥மற்ற உவம உருபுகள்:


' புரைய ஒப்ப உறழ

மான கடுப்ப இயைய ஏய்ப்ப

நேர நிகர அன்ன இன்ன" என்பவாகும்.


உருவகம்

💥உருவகம் என்பது கொடுக்கப்பட்ட சொற்களில் உவமேயம் முதலிலும், உவமை பின்னும் வரும். 


எ.கா:

💠அடிமலர் 


💥இச்சொல்லில் அடி என்பது உவமேயம், மலர் என்பது உவமை ஆகும். 


💥அதாவது உவமை சொல்லினை மாற்றி அமைக்கும் போது அந்த சொல்லானது உருவகமாக கருதப்படுகிறது.


உம்மைத்தொகை

💥இரண்டு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் 'உம்" என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை எனப்படும்.


எ.கா:

💠தாய் தந்தை


💥கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்" என்ற சொல்லானது வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்துள்ளது. எனவே இச்சொல் உம்மைத்தொகை ஆகும்.


எண்ணும்மை

💥இரண்டு சொற்களுக்கு இடையில் 'உம்" என்னும் இடைச்சொல் வெளிப்படையாக வந்தால் அதனை எண்ணும்மை என்கிறோம்.


எ.கா: 

💠தேனும் மீனும்


💥கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்" என்ற சொல்லானது வெளிப்படையாக வந்துள்ளது. இவ்வாறாக வருவது எண்ணும்மை எனப்படும்.


No comments

Powered by Blogger.