TNPSC CCSE-IV EXAM 2019 : GT Part C Notes!! பொதுத்தமிழ் அம்பேத்கர் பற்றிய குறிப்புகள்!!
TNPSC CCSE-IV EXAM 2019 : GT Part C Notes!!
பொதுத்தமிழ்
அம்பேத்கர் பற்றிய குறிப்புகள்!!
🌺 அம்பேத்கரின் இயற்பெயர் - பீமாராவ் ராம்ஜி
🌺 பெற்றோர் - ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமா பாய்
🌺 காலம் - 1891 - 1956
🌺 பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழிக்கப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.
🌺 1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார்.
🌺 1913-ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நாள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
🌺 கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார்.
🌺 அவர் 1915-ல் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்" என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.
🌺 அம்பேத்கர் 'பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்" என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். 'ரூபாயின் பிரச்சினை" என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
🌺 பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
🌺 சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார்.
🌺 இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.
🌺 அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார், இது புனே உடன்படிக்கை எனப்படும்.
🌺 இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா" விருது இவரது இறப்புக்குப் பின் 1990-இல் இவருக்கு வழங்கப்பட்டது.
🌺 2012-ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments