TNPSC CCSE-IV EXAM 2021 : GT Part A Notes!! பொதுத்தமிழ்
TNPSC CCSE-IV EXAM 2021 : GT Part A Notes!!
பொதுத்தமிழ்
யாப்பிலக்கணம் மூவகைச் சீர் மற்றும் நாலசைச்சீர் பற்றிய குறிப்புகள்!!
🌺 நேரசையில் முடிவது நான்கும், நிரையசையில் முடிவது நான்குமாக மூவகைச் சீர் 8 வகைப்படும்.
காய்ச்சீர்கள் - நான்கு
🌾 நேர் + நேர் + நேர் - தேமாங்காய்
🌾 நிரை + நேர் + நேர் - புளிமாங்காய்
🌾 நிரை + நிரை + நேர் - கருவிளங்காய்
🌾 நேர் + நிரை + நேர் - கூவிளங்காய்
🌺 இவை வெண்பாவிற்குரியவை, ஆதலால் இது வெண்பா உரிச்சீர் எனவும் வழங்கப்படுகிறது.
கனிச்சீர்கள் - நான்கு
🌾 நேர் + நேர் + நிரை - தேமாங்கனி
🌾 நிரை + நேர் + நிரை - புளிமாங்கனி
🌾 நிரை + நிரை + நிரை - கருவிளங்கனி
🌾 நேர் + நிரை + நிரை - கூவிளங்கனி
🌺 இவை நான்கும் வஞ்சிப்பாவிற்குரியவை ஆதலால் இவை வஞ்சி உரிச்சீர் எனவும் வழங்கப்படுகிறது.
அலகிட்டு வாய்பாடு கூறுதல்
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து.😊
🌾 பிறர்ஃநாஃணத்ஃ - நிரை நேர் நேர் - புளிமாங்காய்
🌾 தக்ஃகதுஃ - நேர் நிரை - கூவிளம்
🌾 தான்ஃநாஃணாஃ - நேர் நேர் நேர் - தேமாங்காய்
🌾 னாஃயின்ஃ - நேர் நேர் - தேமா
🌾 அறம்ஃநாஃணத்ஃ - நிரை நேர் நேர் - புளிமாங்காய்
🌾 தக்ஃகஃ - நேர் நேர் - தேமா
🌾 துடைத்து - நிரைபு - பிறப்பு
நாலசைச்சீர்
🌺 மூவசைச்சீர் எட்டுடன் நேரசை, நிரையசைகளைத் தனித்தனியாகச் சேர்த்தால் நாலசைச்சீர் 16 கிடைக்கும். இதனைப் பொதுச்சீர் எனக்கூறுவர்.
🌺 தண்பு+, நறும்பு, தண்நிழல், நறுநிழல் என முடிவு பெறும்.
🌺 செய்யுள்களில் பெரும்பாலும் ஈரசை, மூவசைச்சீர்களே வருகின்றன. யாப்பிலக்கண விதிகளுக்கு அமைய, வெண்பாக்களின் இறுதிச் சீராக ஓரசைச்சீர் வரும்.
🌺 வேறு இடங்களில் மிக மிக அரிதாகவே ஓரசைச்சீர்கள் காணப்படுகின்றன. இதுபோலவே நாலசைச் சீர்களும் குறைந்த அளவிலேயே பாக்களில் வருகின்றன.
No comments