ஒப்படைப்பு 2 - 10த் சமூக அறிவியல் Social science assignment 2 தென்மேற்கு பருவக்காற்று

 ஒப்படைப்பு 2 - 10த் சமூக அறிவியல் Social science assignment 2 


தென்மேற்கு பருவக்காற்று :-


* பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கணக் கடற்கரை பகுதிக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும் ஜூலை. 15, இல் அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.


* எல்நினோ காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

 * தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்ப நிலையானது 46" C வரை உயருகிறது.


* இப்பருவக்காற்றிள இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) "பருவமழை வெடிப்பு" எனப்படுகிறது.



இருபிரிவுகள்:


இதன் ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும் ,மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.


அரபிக்கடல் கிளை:


* தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின்

மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப்பொழிவைத் தருகிறது. 


* இக்கிளையானது வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கமைழையைத் தோற்றுவிக்கிறது.



* ஆரவல்லி மலைத்தொடர் இக்காற்று வீசும்திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் இராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவின் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவை தருவதில்லை.


வங்காள விரிகுடா கிளை:


வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கிவீசுகிறது.


இது காசி, காரோ, ஜெயந்தியா குளறுகளால் தடுக்கப்பட்டு மேகால்யாவில் உள்ள மௌசின்ராமில் மிக கனமழையைத் தருகிறது. 


* பிறகு இக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும்போது மழைப்பொழிவில் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.


* இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப்பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது.

No comments

Powered by Blogger.