ஒப்படைப்பு 2 சமூக அறிவியல் 10ஆம் வகுப்பு இந்தியக் காடுகள் பற்றி விவரிக்கவும்:-

 இந்தியக் காடுகள் பற்றி விவரிக்க வும்:-

இந்திய காடுகள் 


அயனமண்டல பசுமைமாறாக் காடுகள்:-


ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கு மேலும், ஆண்டு வெப்பநிலை 22° C க்கு அதிகமாகவும், சராசரி ஆண்டு ஈரப்பதம் 70 சதவீதத்திற்கு மேலும் உள்ள பகுதிகளில் இவ்வகைக்காடுகள் காணப்படுகின்றன. 


* இரப்பர், எபனி, ரோப் மரம், தென்ளை, மூங்கில், சின்கோனா, கிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன,


அயனமண்டல இலையுதிர்க் காடுகள்:-


• இவ்வகை காடுகள் ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவு சுமார் 100 செ.மீ முதல்

200 செ.மீ வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. இப்பகுதியில் ஆண்டு ஈராசரி வெப்பநிலை 27° C ஆகவும் மற்றும் சராசரி ஒப்பு

ஈரப்பதம் 50 முதல் 70 சதவீதமாகவும் உள்ளது.


 * இக்காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைக்காலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன.



 * இக்காடுகள் நறுமண திரவியங்கள் வார்னிஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை அளிக்கின்றன.




அயனமண்டல வறண்ட காடுகள்:


* ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. 


* அயனமண்டல வறண்ட காடுகள் ஒரு இடைநிலை வகைக் காடாகும்.


பாலைவன மற்றும் அரைப் பாலைவணத் தாவரங்கள்: 


* இக்காடுகளை “முட்புதர்க் காடுகள்" என்றும் அழைப்பர். இவை ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50 செ.மீட்டருக்கு குறைவாகவும், அதிக வெப்பமும் மற்றும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.




அல்பைன் காடுகள்;


 * சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகள் உயரமான பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.

இவ்வகைக்காடுகள் ஊசியிலை

மரங்களைக் கொண்டுள்ளன.


 * ஓக், சில்வர்பீர்,பைன் மற்றும் ஜீனிபர்மரங்கள் இக்காட்டின்முக்கிய மரவகைகளாகும்.


அலையாத்திக் காடுகள்:


 இக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.


இவை ஒதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்புநிலக் காடுகள் மற்றும் டெல்டர் காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.



No comments

Powered by Blogger.