பெண்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்
பெண்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்
சாப்பாடுதான் முக்கியம், முதல்ல சாப்பாட்டுல இருந்து ஆரம்பிக்கலாம்.
சூப்பரா சமைக்கத் தெரியாவிட்டாலும், கொஞ்சம் சுமாராவாவது சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்.
இட்லியை உதிர்த்து போட்டு உப்புமா பண்ணனும்னு இல்லை…
சாதாரண ரவை உப்புமாவும் ஓகேதான்.
எங்க அம்மா என்னை மகாராணி மாதிரி வச்சிருந்தாங்க அப்படினு சொல்லிட்டு திரியாம,
வீட்டில் எல்லா வேலைகளிலும் பூந்து விளையாட கற்றுக்கொள்ளுங்கள்.
(முறுக்கு சுடுவது, இடியாப்பம் புளிவதும் இதில் அடக்கம்).
உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை லிஸ்ட் போட்டு குப்பையில் போட்டுவிட்டு,
என்ன தேவை என்பதை லிஸ்ட் போட்டு கடையில் வாங்க கற்றுக்கொள்ளுங்கள்.
பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, மேல்வீடு, கீழ்வீடு, சொந்தக்காரங்க வீட்டுல இருக்குற எல்லாத்தையும் உங்க வீட்ல வாங்கி வைக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனம்னு தெரிஞ்சிக்கோங்க.
சேமிப்பு என்பது பொதுவா பெண்களோட ஒட்டிப்பிறந்த ஒன்று,
அதனால் தினமும் குறைந்தது ஒரு ரூபாயாவது சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நம்முடைய பிரச்சினைகளை, கவலைகளை மற்றவர்களிடம் சொல்வது சிலநேரங்களில் தவிர்க்க முடியாததுதான்,
ஆனால் அதை நம்பிக்கைக்குரிய ஒருவரிடம்தான் சொல்கிறோமா என்பதை கவனத்தில் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
ஆண்களிடமோ/ பெண்களிடமோ, பழகும்போது கெட்டவர்களை இனங்கண்டால் பேச்சை வளர்க்காமல் உடனடியாக துண்டிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமஉரிமை உண்டு என்பதற்காக எல்லாவற்றிலும் கொடி பிடிக்காதீர்கள்,
நம் குடும்ப சம்பந்தப்பட்டவர்களிடம் தாழ்ந்து போவது எந்த விதத்திலும் தவறில்லை என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
என் காசுல உக்காந்து சாப்பிடுற உனக்கு இவ்வளவு திமிரானு? கணவன் கேட்டா…
பெட்டிய தூக்கிட்டு அம்மா வீட்டுக்கு போகணும், இல்ல உடனே வேலைக்கு போகணும்னு அவசியம் இல்ல.
"நின்னு சாப்பிட்டா கால் வலிக்கும்", "உங்களை கட்டிக்கிட்டு வந்து இருக்கேன், இந்த வீட்ல சாப்பிட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு, அப்படிதான் சாப்பிடுவேன்" சொல்லி
பிரச்சினையை நகைச்சுவையா எடுத்துக்க கத்துக்கோங்க.
நம் வீட்டுக்கு ஒருவர் வந்துவிட்டால்…
அவர் நமக்கு பிடிக்காத ஒருவராக இருந்தாலும், அவரை சிரித்த முகத்துடன் உபசரிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
"மொத்தத்தில் பெண்கள் எப்போதும் பெண்கள்தான்"
நாகரீகம் வளர்ந்துவிட்டது என்பதற்காக நம் இயல்பை, பண்பாட்டை மறக்காமல் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
No comments