Current affairs ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இந்தியா இணைந்தது.

 இந்தியாவின் தலைமையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில்



ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை இந்த மாதம் இந்தியா வகிக்க உள்ளது. ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் திருமூர்த்தி தலைமையில் நாளை முதல் கூட்டம் நடக்கஉள்ளது.


ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் திருமூர்த்தி வெளியிட்ட 'வீடியோ' பதிவில் கூறியிருப்பதாவது:ஆகஸ்ட் மாதம் இந்தி யாவின் தலைமையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இயங்கும். இதைத் தொடர்ந்து, 2022 டிச.,ல் மீண்டும் இப்பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்படும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடல்சார் பாதுகாப்பு, அமைதி பராமரிப்பு, பயங்கரவாத தடுப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தாண்டு துவக்கத்தில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இந்தியா இணைந்தது.


இதையடுத்து கடந்த ஏழு மாதங்களில் பல்வேறு பிரச்னைகளில் இந்தியாவின் கொள்கைகள் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளன. பொறுப்புகளை தோளில் சுமக்க இந்தியா எப்போதும் அஞ்சியதில்லை. ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கும், முன்னுரிமை பிரச்னைகளுக்கும் இந்தியா எப்போதும் குரல் கொடுத்து வருகிறது.நாட்டின் 75வது சுதந்திர தின விழாவில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இரு ஆண்டுகள், இரு முறை தலைமை பொறுப்பு ஆகியவற்றை வகிக்க இருப்பது பெருமையாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.