Current affairs வேலூர்: கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய அரசின் 'காயகல்ப்' விருது
வேலூர்: கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய அரசின் 'காயகல்ப்' விருது
சிறப்பான பராமரிப்புக்காக வேலூர் கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய அரசின் 'காயகல்ப்' விருதுடன் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் மூலமாக தூய்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகத்துடன் செயல்படும் அரசு மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆண்டு தோறும் 'காயகல்ப்' விருதுடன் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,; 2020-21 ஆம் நிதியாண்டில் சிறப்பாக செயல்படும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2020-21-ம் ஆண்டில் தமிழக அளவில் சிறப்பான பராமரிப்புக்காக வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 'காயகல்ப்' விருதுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு. வேலூர் மாநகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இந்த நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 படுக்கை வசதிகள் கொண்டது. ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள், மருந்தாளுநர், உதவியாளர்கள் என மொத்தம் 15 பேருடன் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, தினசரி சராசரியாக 180-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
சுகாதாரமான மருத்துவ வளாகம், நோயாளிகள் குறித்த ஆவணங்கள் பராமரிப்பு என பல்வேறு சிறப்புகளுடன் 'காயகல்ப்' விருது பெற்றுள்ளது கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம். இதனால் அதன் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
No comments