Current affairs ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்பு

 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்பு



ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டது.


ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15 உறுப்பினர் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.


இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில் இந்தியா இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.


ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி, பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக, மாதம் ஒரு நாடு இருக்கும். அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான தலைவராக தற்போது இந்தியா பொறுப்பேற்றுள்ளது.


இந்தியா தனது முதல் பணி நாளான நாளைய திஙனம் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, செய்தியாளர்களை சந்தித்து பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாத திட்டம் குறித்து விளக்கவுள்ளார்.


ஆகஸ்ட் மாதத்திற்கான திட்டங்கள் பற்றி திருமூர்த்தி கூறியதாவது:


முன்பு பதவியில் இருந்த கடைசி ஏழு மாதங்களில், நாங்கள் பல்வேறு விஷயங்களில் கொள்கை மற்றும் முன்னோக்கு நிலையை எடுத்துள்ளோம். நாங்கள் பொறுப்புகளை சுமக்க பயப்படவில்லை. நாங்கள் செயலில் இருந்தோம்.


சபை ஒன்று கூடி, அன்றைய பல்வேறு முக்கியப் பிரச்னைகளில் ஒரே குரலில் பேசுவதை உறுதி செய்தோம். எங்கள் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே மாதத்தில் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்குவது எங்களுக்கு ஒரு தனி மரியாதை.


பாதுகாப்பு கவுன்சிலில் நாங்கள் பணியாற்றிய போது எங்களுக்கு அளித்த அனைத்து ஆதரவிற்கும் பிரான்ஸ் நாட்டுக்கு நன்றி கூறுகிறோம். அமைதியை நிலைநிறுத்தும் வகையில் நமது முன்னுரிமைப் பகுதிகளான கடல் பாதுகாப்பு, அமைதி காத்தல் மற்றும் தீவரவாதத்துக்கு எதிரான மூன்று உயர்மட்ட கையெழுத்து கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.


பாதுகாப்பு கவுன்சில் தனது நிகழ்ச்சி நிரலில் சிரியா, ஈராக், சோமாலியா, ஏமன் மற்றும் மத்திய கிழக்கு உட்பட பல முக்கிய கூட்டங்களை நடத்தும். பாதுகாப்பு கவுன்சில் லெபனானில் சோமாலியா, மாலி மற்றும் ஐ.நா., இடைக்கால குழுவில் முக்கிய தீர்மானங்களை ஏற்கும்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.