வள்ளுவ🔥 தீ - பாகம் 1
***************************
வள்ளுவ🔥 தீ - பாகம் 1
***************************
💜தெய்வப் புலவனின் குறள் இன்று💜
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
குறள் - 525
அதிகாரம் - சுற்றந்தாழல்
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔺🔺🔺🔺🔺🔺
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.
Explanation:
Who knows the use of pleasant words, and liberal gifts can give,
Connections, heaps of them, surrounding him shall live.
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
💙பாரதியின் அனல் வரிகள்💙
மாயையைப் பழித்தல்
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ
மாயையே -- மனத்
திண்மையுள் ளாரைநீ செய்வது மொன்றுண்டோ --
மாயையே.
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே -- நீ
சித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ --
மாயையே.
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்கெட்ட
மாயையே -- நான்
உன்னைக் கெடுப்ப துறுதிஎயன் றேயுணர்
மாயையே.
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே -- இந்தத்
தேகம் பொய் யென்றுணர் தீரரை யென்செய்வாய் --
மாயையே.
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப
மாயையே -- தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ --
மாயையே.
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே -- சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை --
மாயையே.
என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட வல்லேன்
மாயையே-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்வராது காண்-
மாயையே.
யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன்
மாயையே -- உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்கு வேன் உன்னை --
மாயையே.
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
💚ஒரு இனிய சிந்தனை💚
நாம் ஏன் இந்த பூமியில் பிறந்தோம் என சிந்தித்ததுண்டா?
நம்பிக்கை 🏵️
மகிழ்ச்சி 🏵️
அன்பு🏵️
ஒவ்வொரு நாளும் நாம் அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கொட்டிக் கிடக்கின்றன 🍀
வாழ்க்கைப் பாதையில் நாம் காண வேண்டிய பொக்கிஷங்கள் ஏராளம்.🍀🍀
புதிதாகத் தான் பிறக்கிறோம் ஒவ்வொரு நாளும் நாம்..🌻🌻🌻
பொன்னான நம் செயலைப் புன்னகையுடன் தொடங்கி இயங்குவோம்..✨✨✨✨
அன்புடன் வணக்கம் 🙏
வாழ்க வளமுடன் 👏
வள்ளுவ 🔥தீ - வளரும்....
வள்ளுவ தீ - பாகம் 1
https://www.pencilmaths360.in/2021/09/1.html
வள்ளுவ தீ - பாகம் 2
https://www.pencilmaths360.in/2021/09/2.html
வள்ளுவ தீ - பாகம் 3
https://www.pencilmaths360.in/2021/09/3.html
வள்ளுவ தீ - பாகம் 4
No comments