10ம் வகுப்பு அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022பாடம் - 9 ; நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் மதிப்பீடு ; (விடைகள்) TNPSC TRB TET SCIENCE QUESTIONS.
10ம் வகுப்பு அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
பாடம் - 9 ; நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்
மதிப்பீடு ; (விடைகள்)
I சரியான விடையைத் தேர்ந்தெடு;
1) திரவ நிலையில் உள்ள உலோகம் எது?
- பாதரசம்
2) ஓசோனில்(C3) உள்ள ஆக்ஸிஜன் அணுக்களின் எண்ணிக்கை?
- 3
3) உலோகங்களை அவற்றின் தகடுகள் ஆக மாற்ற உதவும் பண்பு எது?
- தகடாக விரியும் பண்பு
4) கார்பனின் குறியீடு - C
5) வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்? - பாதரசம்
6) நீரில் உள்ள தனிமங்கள் - ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
7) உலோகத்திற்கு உருகுநிலை அதிகம்
8) பருப்பொருட்கள் திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் இருக்கும்
9) அலுமினியத்தின் குறியீடு - Al
10) சாதாரண உப்பின் வேதிப்பெயர் - சோடியம் குளோரைடு
II மாறுபட்டதை வட்டமிடுக
1) (i) சல்பர்
2) (ii) சல்பர்
III பொருத்துக;
அ) தனிமம் - அணுக்களால் உருவானது
ஆ) சேர்மம் - மூலக்கூறுகளால் உருவானது
இ) கூழ்மம் - தூய்மையான பொருள்
ஈ) தொங்கல் - அசையாமல் வைக்கும் போது கீழே படிகிறது
உ) கலவை - தூய்மையற்ற பொருள்
IV
1) ஆக்சிசன்
2) தங்கம்
V கோடிட்ட இடத்தை நிரப்புக;
1) நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்கப் பயன்படும் வாயு ? - குளோரின்
2) அமோனியாவில்(NH3) உள்ள தனிமங்கள் - நைட்ரஜன், ஹைட்ரஜன்
3) நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஏதேனும் இரண்டு சேர்மங்கள் - நீர், உப்பு
4) சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் மற்றும் கரிமச் சேர்மங்கள் என இரு வகைப்படும்
5) தீப்பெட்டி தயாரிக்கவும், எலி மருந்து தயாரிக்கவும் பாஸ்பரஸ் என்ற தனிமம் பயன்படுகிறது
6) நீரிலிருந்து ஆல்கஹால் பின்னக் காய்ச்சி வடித்தல் முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது
7) டெட்டாலின் சிறு துளியை நீரில் கலக்கும் போது கலங்கலாக மாறுகிறது ஏன்?
* டெட்டாலில் உள்ள எண்ணெய் துளிகள் நீரில் பரவி பால்மத்தை உருவாக்குவதால் கலங்கலாக மாறுகிறது
No comments