10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-202210th social refresh course in tamil medium பாடம் 12. இந்தியாவின் கணவாய் மற்றும் கடல் துறைமுகத்தின் பங்களிப்பு
10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
10th social refresh course in tamil medium
பாடம் 12. இந்தியாவின் கணவாய் மற்றும் கடல் துறைமுகத்தின் பங்களிப்பு
மதிப்பீடு;( விடைகள் )
1) ஸ்ரீநகரையும்,கார்கிலையும் இணைக்கும் கணவாய் எது?
* சோஜி லா (zoji la)
Traveled by Srinagar - Leh Highway
Location - ladakh, india
Range. - Himalaya
2) பன்னாட்டு வணிக முனையங்களாகத் திகழ்ந்த கேரளக் கடற்கரைத் துறைமுகம் எது?
* கொச்சி ( Kochi )
3) இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு வந்த ஐரோப்பியர் யார்?
* வாஸ்கோடாகாமா
* நாள் - மே - 20 - 1498
* இடம் - கள்ளிக்கோட்டை (கேரளா)
4) அ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
5) i) அனைத்து பகுதியிலுமான கடல் வணிகத்தை போர்ச்சுகீசியர்களால் கட்டுப்படுத்த முடிந்தது எவ்வாறு?
* போர்ச்சுக்கலைச் சேர்ந்த இளவரசர் ஹென்றி என்ற கடலோடி, நீண்ட நெடுந்தூர கடற்பயணங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கினார்.
* மாலுமிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு கடற்பயண பள்ளியை அவர் நிறுவியிருந்ததார்.
* அவருடைய பள்ளியில் கடற் போக்குவரத்தை கையாளுவதற்கான சாதனங்களான கடலோடியின் திசைக்காட்டும் கருவி மற்றும் வான் நோக்கும் கருவி போன்றவற்றை எப்படி கையாளுவது என பயிற்சி அளிக்கப்பட்டது.
* நெடுந்தொலைவு கடற் பயணத்திற்கான ஆர்வத்தோடு இதுவரை பயன்படுத்தாத கடல் பகுதிகளில் தேடுதல் நிகழ்த்தும் சாகச உத்தியோகம் போன்றவை.
ii) தற்கால இந்தியாவில் வணிகத்திற்கு துறைமுகத்தின் பங்கு மற்றும் துறைமுகங்களின் செயல்பாடு ;
* இந்தியாவில் மொத்தம் 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன
* எ.கா விசாகப்பட்டினம் , மும்பை, சென்னை
* ஒரு நாட்டின் 'ஏற்றுமதி' மற்றும் 'இறக்குமதி' போன்றவை அதிகமாக துறைமுகங்கள் வழியாகவே நடைபெறுகிறது.
* இந்தியாவின் பொருளாதார ஏற்றத்திற்கு துறைமுகங்களை பெரும் பங்காற்றுகின்றன.
* கப்பல்கள் மூலமாகவே கனமான பொருட்களை(சரக்குகள்) ஒரு நாட்டிலிருந்து மற்றோர் நாட்டிற்கு கொண்டு செல்ல இயலும்.
* கடல் வழி பயணத்தில் அதிகமான பொருட்களை குறைந்த செலவில் கொண்டு செல்ல முடியும்.
10th social புத்தாகப் பயிற்சி 7ம் பாடம் answers please
ReplyDelete