10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-202210th social refresh course in tamil medium 2021-2022 பாடம் -13 ; மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்
10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
10th social refresh course in tamil medium 2021-2022
பாடம் -13 ; மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்
மாணவர் செயல்பாடு ; (விடைகள் )
1) நிலநடுக்கோட்டை கடந்து முதலில் பயணித்தவர் யார்?
* லோபோ கோன்ஸால்வ்ஸ்
2) ஆப்பிரிக்காவின் தெற்கு முனைக்கு நன்னம்பிக்கை முனை என பெயரிட்டவர் யார்?
* போர்ச்சுகலின் அரசர் இரண்டாம் ஜான்
3) கள்ளிக்கோட்டையில் மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதை கண்டுபிடித்தவர் யார்?
* வாஸ்கோடாகாமா
4) கொலம்பசுக்கு உதவிய ஸ்பெயின் அரசர்?
* ஃபெர்டினாண்ட்
5) பிலிப்பைன்ஸ் தீவை கண்டறிந்தவர் யார்?
* மெகெல்லன்
மதிப்பீடு; (விடைகள்)
1) மனிதநேயத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
* பிரான்சிஸ்கோ பெட்ராக்
2) வில்லியம் ஹார்வியின் கண்டுபிடிப்பு?
* ரத்தத்தின் சுழற்சி
3) பூமத்தியரேகையை கடந்த முதல் மாலுமி யார்?
* லோபோ கோன்ஸால்வ்ஸ்
4) பசுபிக் பெருங்கடல் என பெயரிட்டவர்?
* ஃபெர்டினாண்ட் மெகெல்லன்
5) அமெரிக்க கண்டம் யாரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது?
* அமெரிகோ வெஸ்புகி
II விடையளி ;
1) அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு ஐரோப்பாவில் ஏற்படுத்திய தாக்கங்கள் ;
* 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜோஹன்னஸ் கூட்டென்பர்க் ஜெர்மனியில் அச்சு இயந்திரத்தைக்
கண்டுபிடித்தார். இது நவீன மயமாதலை வேகப்படுத்தியது.
* இத்தாலியிலிருந்த கல்வியறிஞர்கள் கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியத்தின் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்தனர். பின்னர் அவற்றை அச்சிட்டு வெளியிட்டனர். இது மறுமலர்ச்சியின் புத்தாங்கக்களுக்கு தூண்டுகோலாய் அமைந்தன.
* அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பினால் பல பிரதிகள் அச்சிடப்பட்டு பரந்த அளவில் சுற்றுக்கு விடப்பட்டன. அதனால் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான அறிவு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.
2) உலக வரைபடத்தில் - வழித்தடங்கள்
9th social book page no : 115
3) தொடக்கக்கால அச்சு இயந்திரங்கள் ;
* விலங்கு தோலின் மீது கையால் எழுதப்பட்ட எழுத்துப் பிரதிகளே பயன்பாட்டில் இருந்தன.
* ஐரோப்பிய கண்டத்தில் மட்டுமே பழக்கத்தில் இருந்தது
* ஆரம்பத்தில் சிறப்புரிமை பெற்ற ஒரு சிலர் மட்டுமே பெற்று படிக்க முடியும்.
உதாரணம் ; கூட்டென்பர்க்கின் அச்சகம் (ஜெர்மனி)
நவீனகால அச்சு இயந்திரங்கள் ;
* காகித எழுத்துப்பிரதிகள் பயன்பாட்டில் உள்ளன.
* உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது.
* கணினி பயன்பாட்டால் துல்லியமாகவும் வேகமாகவும் செயல்படுகிறது.
* தமிழ்நாட்டில் சிவகாசியில் அதிக அச்சு எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
Previous lesson
Sir Tamil medium
ReplyDelete