10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-202210th social refresh course in tamil medium பாடம் 15 ; காடுகள் அழிப்பிற்கான காரணிகள்




10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022

10th social refresh course in tamil medium



பாடம் 15 ; காடுகள் அழிப்பிற்கான காரணிகள்

மதிப்பீடு; (விடைகள்)

1) உலகம் வெப்பமயமாதல் காரணங்கள்;

* அதிக அளவு கார்பன் வெளியேற்றம்

* காடுகளை அழித்தல், மரங்களை வெட்டுதல்

* குளோரோ புளோரோ கார்பன் (CFC) அதிகளவு வெளியேற்றம்

* எரிமலை வெடித்தல்

* வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை 

3) காடுகளுக்கும், வளி மண்டலத்திற்கும் உள்ள தொடர்பு ;

* உயிரினங்கள் வாழ்வதற்கு ஆக்சிசன் மிகவும் இன்றியமையாததாகும்.

* இந்த ஆக்சிஜன் வளி மண்டலத்தில் அதிக அளவு கிடைக்க காடுகள் உதவுகின்றன.

* வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரித்து நல்ல மழைப்பொழிவு கிடைக்க காடுகள் உதவிபுரிகின்றன.

4) மரங்கள் நமக்கு தேவையான பிராணவாயு வழங்கும் நிகழ்வு?

  * ஆக்சிஜனேற்றம்

5) உலக சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் புவி உச்சி மாநாடு கி.பி 1992 ஆம் ஆண்டு "பிரேசில்" நாட்டில் உள்ள ரியோ-டி- ஜெனிரோ நகரில் கூட்டப்பட்டது.

6) மரம் வெட்டுதலை முறை படுத்துவதன் மூலம் காடுகளைப் பாதுகாக்க முடியும்.

7) இயற்கை மனிதனுக்கு பலதரப்பட்ட வளங்களை வழங்குகிறது.

8) தமிழகம் 15% காடுகளை கொண்டுள்ளது.

9) காடுகளை பாதுகாக்க பின்பற்றப்பட வேண்டியவை ;

* மனிதனின் பேராசையை ஒழிக்க வேண்டும்.

* காடுகளுக்குள் அளவுகடந்து ரோடுகள் , மின்சாரம் கொண்டு வருவதை கட்டுப்படுத்த வேண்டும்.

* காடுகளுக்குள் மனித நடமாட்டத்தை முறைப்படுத்த வேண்டும்.

* காடுகளுக்குள் வீடுகள் ஹோட்டல்கள் கெட்ட அனுமதிக்கக்கூடாது. இருக்கும் வீடுகள் ஓட்டல்கள் அகற்றப்படவேண்டும்.

* காடுகள் விவசாய நிலங்களாக மாறுவதை தடுக்க வேண்டும்.

காடுகள் இல்லையெனில்

* பூமியில் மனிதன் வாழ இயலாது

* எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.

* பறவைகள் விலங்குகள் போன்றவை இருக்காது.

* மழைப்பொழிவு இல்லாமல் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

* உலகம் வெப்பமயமாதல் அதிகரிக்கும்.



Lesson 14 click 

No comments

Powered by Blogger.