10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-202210th social refresh course module 2021-2022பாடம் 16 மக்கள் அடர்த்திமதிப்பீடு ( விடைகள்)
10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
10th social refresh course module 2021-2022
பாடம் 16 மக்கள் அடர்த்தி
மதிப்பீடு ;( விடைகள்)
1) சாதகமான காலநிலை நிலவும் இடங்களில் மக்கள் அடர்த்தி அதிகம்.
2) மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நாடு?
* வங்காளதேசம்
3) மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள நாடு?
* மங்கோலியா
4) ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் வாழும் மக்கள் தொகையின் அடிப்படையில் மக்கள் அடர்த்தி கணக்கிடப்படுகிறது
5) தற்போதைய உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை?
* 8 பில்லியன்
6) தமிழ்நாட்டின் மக்கள் தொகை - சிக்கிம் மாநிலத்தின் மக்கள் தொகை ;
தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகம் ஏன்?
* தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 8 கோடி , சிக்கிம் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 7 லட்சம் மட்டுமே
* தமிழ் நாட்டின் நிலப்பரப்பு சிக்கிம் மாநிலத்தை விட மிக அதிகம்
* தமிழ்நாட்டில் சாதகமான சூழ்நிலை மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகம்
* சிக்கிம் மாநிலம் குறைந்த நிலப்பரப்பைக் கொண்டது.
* வேலை வாய்ப்புகள் குறைவு, குளிர் காலங்களில் குளிர் அதிகமாக இருக்கும்.
7) ஒரு பகுதியின் மக்கள் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள்;
1)இயற்கை காரணிகள்;
* வெப்பநிலை , மழை, மண், நிலத்தோற்றம் ,நீர் ,இயற்கை தாவரங்கள், கனிம வளங்கள்.
2) வரலாற்று காரணிகள்;
* வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரீகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள்.
3) பொருளாதாரக் காரணிகள்;
* கல்விக்கூடங்கள், வேலைவாய்ப்புகள், உற்பத்தி தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள், வியாபாரம், வணிகம் போக்குவரத்து.
👆
No comments