10ம் வகுப்பு அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் -பாடம் 6 வெப்பம் விடைகள் TNPSC||TET||TRB

10ம் வகுப்பு அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம்
பாடம் 6 

வெப்பம் விடைகள்



(ஒரு மதிப்பெண் வினா விடை)


1)கலோரி என்பது எதனுடைய அலகு?

விடை அ)வெப்பம்

2)வெப்பநிலையின் SI அலகு?

விடை ஈ)கெல்வின்

3)மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தை கடத்தும் முறையின் பெயர் என்ன?

விடை ஆ)வெப்பக் கடத்தல் 


II நிரப்புக


1) வேகமாக வெப்பத்தை கடத்தும் முறை
விடை ; கதிர்வீச்சு

2)பகல் நேரங்களில் காற்று கடலிலிருந்து நிலத்திற்கு பாயும்

3)திரவங்களும் வாயுக்களும் வெப்பச்சலனம் முறையில் வெப்பத்தை கடத்தும்

4)வெப்பநிலை மாறாமல் பொருளன்று ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதை உள்ளுறை வெப்பம் என்கிறோம் 

III சுருக்கமான விடையளி


1)வெப்பக் கடத்தல் :
*அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்பநிலையில் உள்ள பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வு வெப்பக்கடத்தல் எனப்படும்

2)பனிக்கட்டியானது இரட்டை சுவர் கொள்கலனில் வைக்கப்படுவது ஏன்?

*பனிக்கட்டியானது வெப்பச் சலனத்தின் காரணமாக நீராக மாறிவிடாமல் இருக்க பனிக்கட்டியானது இரட்டை சுவர் கொள்கலனில் வைக்கப்படுகிறது

3)மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீர் எப்போதும் குளிராக இருப்பது ஏன்?

*மண்பானையிலுள்ள  நுண்துளைகள் வழியாக நீர் வெளியேறி ஆவியாக மாறுகிறது. அதற்கு தேவையான வெப்பத்தை மண்பானையிலுள்ள நீரிலிருந்தும் பெறுவதால் மண்பானையில் உள்ள நீர் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.




4)வெப்பச்சலனம் - வெப்பகதிர்வீச்சு வேறுபடுத்துக

வெப்பச்சலனம்
*பருப்பொருட்கள் தேவை.
*வெற்றிடத்தில் நடைபெறாது.

வெப்பக்கதிர் வீச்சு 
*பருப்பொருட்கள் தேவையில்லை.
*வெற்றிடத்தில் நடைபெறும் .

5)கோடை காலங்களில் மக்கள் ஏன் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?

*வெள்ளை நிறம் சார்ந்த ஆடைகள் சிறந்த வெப்ப பிரதிபலிப்பான்கள்.எனவே கோடை காலங்களில் அவை நமது உடல் நிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

6)தன்வெப்ப ஏற்புத்திறன்- வரையறு 

*ஓரலகு நிறையுள்ள (1kg) பொருளின் வெப்பநிலையை ஒரு அலகு(1k) உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு அதன் தன்வெப்ப ஏற்புத்திறன் எனப்படும்.



Join our Telegram link for Refresher course module answers

Refresher course module Answers 2021-22 புத்தாக்கப் பயிற்சி கட்டகம் TN 6 TH TO 9TH ENGLISH MATHS தமிழ் Science SOCIAL Both Tamil
Refresher course module Answers 2021-22 புத்தாக்கப் பயிற்சி கட்டகம் TN 6 TH TO 9TH ENGLISH MATHS தமிழ் Science SOCIAL Both Tamil and English Medium channel 👍✏️pencilmaths360 👈🙏

No comments

Powered by Blogger.