வள்ளுவ🔥தீ - பாகம் 2



💜தெய்வப்புலவனின் குறள் இன்று💜


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
 செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

    

     குறள் - 33
    அதிகாரம் - அறன் வலியுறுத்தல்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

Explanation:-

As much as possible, in every way, incessantly practise virtue.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


💙பாரதியின் அனல் வரிகள்:-💙



🍀🍀🍀மனப் பெண்🍀🍀🍀

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்💝


தொட்டதை மீள மீளவும் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்💝


பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய், சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்.💝


அங்ஙனே
என்னிடத் தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய் காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை💝


உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்,
இன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்,
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,💝

தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,
தன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய், காணெனிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய், பொருளையுங் காணாய்,💝


மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னோடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்; நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியுந் தேடுவேன்;💝


உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக் கின்ப ஓங்கிடச் செய்வேன்.💝

🦚🦚🦚🦚☘️🦚🦚☘️☘️☘️☘️☘️☘️☘️🦚🦚🦚


💜இன்றைய இனிய சிந்தனை💜

        எல்லாம் நன்மைக்கே என்று நாம் யோசிக்கும் போது நம் மனம் சற்று ஆறுதல் அடைகிறது...🏵️🏵️

        நம்மை விட துன்பங்கள் அதிகம் அனுபவிப்பர் மீது எண்ணங்கள் ஓங்கும் போது, நம் கவலையின் வீரியம் குறையத்தான் செய்கிறது...🌻🌻

        நம்பிக்கை விதை நாளும் முளைப்பதால் தினமும் புது அரும்புகள் எனும் உற்சாக ஊற்று நம்மில் சுரக்கட்டும்💎💎

      அன்புடன் வாழ்வோம்...
அனைவரும் மகிழ 🙏

வாழ்க வளமுடன் 👏

வள்ளுவ 🔥 தீ வளரும்....💥💥💥



Telegram Link👇👇







No comments

Powered by Blogger.