வள்ளுவ🔥தீ - பாகம் 3
வள்ளுவ🔥தீ
-பாகம் 3
🦚தெய்வப் புலவனின் குறள் இன்று🦚
உடையர் எனப்படுவது தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று.
குறள் - 591
அதிகாரம் - ஊக்கமுடமை
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess?
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
🦜பாரதியின் அனல் வரிகள்🦜
✨✨✨அச்சமில்லை✨✨✨
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம்
எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை💥
அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணிநம்மைத்
தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை💥
அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை💥
அச்சமென்பத் தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம்
இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை💥
அச்சமென்ப தில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை🌟
அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து
நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை🌟
அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற்
படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை🌟
அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை🌟
அச்சமென்ப தில்லையே.
🌺🌺🌺இன்றைய இனிய சிந்தனை🌺🌺🌺
ஆனந்தப் புன்னகை நம்மை ஆட்கொள்ளட்டும் இனிய வணக்கம்.💝🙏
🦚🦚🦚மாற்றம் நல்லது...🦚🦚🦚
🌺🌺🌺தோல்வி கண்டு அஞ்சாதே நெஞ்சே..
🌸🌸🌸உன் ஆழ்மனம் நினைத்து முடிவு செய்யப்பட்டது நிச்சயம் உன்னை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று உயர ஏற்றி வைத்து அழகு பார்க்கும்...
🌹🌹🌹நினைத்ததை தொடங்குவது மட்டுமே இப்போது
நம் முழுமூச்சாக இருக்கட்டும்..
💜மாற்றங்கள் நம் மன கவலைகள் மாற்றும் மலர்களைத் தூவி, சந்தோஷப் பாதையின் வாசல் இனிதே விரிய🦚🦚🦚
அன்புடன் இனிய வணக்கம்
வாழ்க வளமுடன் 👏
வள்ளுவ💥தீ வளரும் 🌟🌟🌟
No comments