ஆண் தேவதை....🚶👣ஆயிரம் கண்கள் இந்த ஆண் பிள்ளையை ரசிக்காமல் கடந்திருக்காது...👀👁️👁️



ஆண் தேவதை....🚶👣

      எந்த ஒரு ஆணும் , யாரோ ஒரு பெண்ணுக்கு நிச்சயம் தேவதையாக சில காலங்கள் தோன்றி இன்றும் யுகங்கள் மாற்றம் அடைந்து விட்டாலும் அதே குளுமையான நினைவில் லயித்து இருந்து கொண்டிதானிருப்பான்...⭐🌈

     தோழன்..🐥
   
      பால்ய நட்பு..🐣

      முதல் பிஞ்சு காதல்..🐤

      இளமையின்கனவுதோழன்..🦜

       துணைவனாய் மணக்க விரும்பிய ஹீரோ..🌹


இன்னும் நிறைய பரிமாணங்களில் அவள் தன் வாழ்வின் பட்டாம்பூச்சியாய்🐝🦋 பறந்த காலங்களில் இவன் அவள் சிறு உலகின் தேவலோக மன்னன் ஆகத்தான் இருந்து இருப்பான்.

இது எந்த பெண்ணும் கடந்து வராத பாதை அல்ல..🐾

இவை அனைத்தும் ஒரு நாள் கணவன் என்ற பெயரில் மொத்தமாக அடைக்கலம் புகும் நாளில் நிம்மதி சிறகை விரித்து பெண் மனம் பறக்கிறது..🦋🦚

      தன்னவன், தன் எதிர்பார்ப்புக்கு மாறாக தன் எண்ண ஓட்டங்களில் இருந்து மாறினால் பிடிக்காமல் போகலாம் ஆனால் 🕊️🐦

      அவன் தேவதையாய் வலம் வந்த காலங்கள் உண்மை...🕺🤸

    யாரோ ஒரு பெண்ணுக்கு நிச்சயம் தேவதையாக பல இடங்களில் ராஜாவாக அரியணையில் அமர்ந்து தான் இருந்திருப்பான்..🤾🤴💞

   எந்த பெண்ணும் சொல்லிதான் தெரிய வேண்டும் என்றால் அது  நாணம் என்ற கற்பின் வலிமையால் இவனுக்கு தெரியாமல் இருந்திருக்குமே ஒழிய ஆயிரம் கண்கள் இந்த ஆண் பிள்ளையை ரசிக்காமல் கடந்திருக்காது...👀👁️👁️

    மற்றவள் தன்னவனை ரசித்த கண்களின் வழியே இந்த ஆண் ஒரு பெண்ணால் நேசிக்க பட வேண்டும்...💕💯

   ஒரு பெண், தன் மொத்த உலகின் ஆண் தேவதைகளும் இவனுக்குள் புதைந்துள்ள சூட்சுமத்தை கண்டு கொண்டால், அவள் இவனைச் சுற்றிய  பம்பரக் கயிற்றை போல விட்டு விலகி செல்ல விரும்புவது இல்லை..🎆


     தன் கனவுலகில் உண்டாக்கிய மொத்த அன்பையும் கொட்டித் தீர்க்க கிடைத்த இல்லற😍🥰 வாழ்க்கைத் துணைவனிடம் 

  தோழனின் ஆத்மார்த்தமான நம்பிக்கையை...💃👫

   தந்தையின் அன்பின் அஸ்திவாரத்தை👨‍🦰👨‍👦

   சகோதரனின் தாங்கிப் பிடிக்கும் ஊன்றுகோலை..👥🌺

இன்னும்இன்னும் நிறையகாதலை 🎉

 பெண்கள் தனக்காகவே இரண்டறக் கலக்க பிறந்தத் துணையிடம்..👑💎

  காலம் காலமாக உடன் வரும் அந்த ஆபத்பாந்தவனிடம்...💜💙

கண்டு பிடித்து வாழும் வாழ்க்கைதான் சொர்க்க வாசலில் தினமும் கால் பதிக்கும்...🎇🎊

இன்ப துன்பங்களை எல்லாம் எல்லாம் இருவரும் ஒன்று சேர்ந்து கடந்து இந்த பெண்ணின் ஆடவன் ஒரு தேவதையாகவே இறுதி வரை பூஜிக்கப்படட்டும்..💜👦🕺

அத்தனை ஆண் தேவதைகளுக்கும் ஒவ்வொரு பெண்ணின் அன்பும் சென்று சேரட்டும்...🏆👦🙋👏 மேலும்,
அது தனக்கான பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவன் அடையும் இன்ப போதைக்கு எல்லையே இல்லை...🔥🔥💘💜

அந்த போதையைத் தீராமல் கொட்டிக் கொண்டே இருக்கும் பெண்ணைத் தினமும் தன் அருகிலேயே ரசிக்கட்டும்...💚👩‍❤️‍👨

📌📌📍💘💘💘💘📍📌📌📌
காலம் ரொம்ப வேகமா தான் கடந்தது போகுது.. அதுக்கு முன்னாடியே அவனுக்கு உணர்த்திடணும் அவன் ஒரு தேவதை என்று..🧔🌟🦚

நம்மதான் இவளுடைய ஆண் தேவதை என்ற பூரண நம்பிக்கை அவனுக்கு கொடுத்திடனும்..📌📍

தாய் கண் கொட்டாமல் வளர்த்த பிஞ்சுமனம் தானே இவன்..🧓
அவளது அரவணைப்பில் இந்த ஆண் தேவதை பூமியில் மன்னாக வலம் வரட்டும்..👦🕺

உணர்த்தி விடுவோம் இன்றே தாமதமின்றி..👫💃

இனிக்கட்டும் வாழ்க்கை...

வாழ்க வளமுடன்...

💎💎💎💎💎💎💎💎💎💎💎💎

இணையுங்கள் நட்புகளே
உங்கள் எண்ணங்கள் வண்ணங்களாய் மிளிரும் நம் பக்கங்கள்..
www.pencilmaths.in
 
நட்புடன்..

அன்புத் தோழி தோழர்களுக்கு மனதில் எழும் உங்கள் தனிப்பட்ட கவிதை அனுபவம் கருத்துகள் அன்புடன் வரவேற்கிறது  நம்பிக்கைக்கு பாத்திரமான
Telegram Safety Personal Page

ELUTHUM DEIVAM எழுத்தும் தெய்வம்✍️ YouTube


No comments

Powered by Blogger.