PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-2கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும்
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்
பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும்
1) நடத்தைக் கோட்பாட்டினர் மனிதனின் நடத்தையை எதன் வாயிலாக தெளிவுபடுத்தினார்?
* மறிவினை (Reflex)
2) முழுமைக் காட்சிக் கோட்பாடு என்ற புதிய கொள்கை உளவியலில் உதயமான ஆண்டு?
* 1912
3) நடத்தைக் கோட்பாட்டிற்கு எதிராக வந்த புதிய கொள்கை எது?
* முழுமைக் காட்சி கோட்பாடு
4) ஒரு சைக்கிளை பார்க்கும்போது சக்கரம், மணி, ஹாண்டில்பார் என பிரித்துப் பார்க்காமல் முழுமையாக அதனை சைக்கிள் என பார்ப்பது எந்த கோட்பாடு?
* முழுமைக் காட்சி கோட்பாடு
5) கெஸ்டால்ட்(Gestalt) என்ற ஜெர்மானிய சொல்லுக்கு பொருள் யாது?
* உருவம் , வடிவம்
6) *உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்டு
* தனிநபர் உளவியல் - ஆட்லர்
* பகுப்பு உளவியல் - யங்
* மனிதநேய உளவியல் - கார்ல் ரோஜர்ஸ் & மாஸ்லோ
7) மனிதனின் நடத்தையை நிர்ணயிப்பதில் அவனுடைய அடிமன ஆழத்தில் அமைந்திருக்கும் நனவிலி மனத்தின் முக்கியத்துவத்தை எந்த பகுப்பாய்வு கோட்பாடு வலியுறுத்துகிறது?
* உளப்பகுப்புக் கோட்பாடு (சிக்மண்ட் பிராய்டு )
8) மனித நடத்தையின் இரு கூறுகள் ;
* நனவு அனுபவங்கள்
* நனவிலி அனுபவங்கள்
9) சிலரிடம் காரணமின்றி கோபப்படுதல், சிலரிடம் உடனே நட்பு கொள்ளுதல் போன்றவை?
* நனவிலி அனுபவங்கள்
10) பசி, வலி போன்றவை ?
* நனவு அனுபவங்கள்
Part 1. Click here
Soon..
No comments