PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-4கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும் TRB PREPARATION
PG - TRB ;(முக்கியமான வினாக்கள்)
PART-4
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) -
பேராசிரியர் கி.நாகராஜன்
பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும்
1) உளவியல் முறைகளில் மிகவும் பண்டைய முறை எது?
* அகநோக்கு முறை (introspection)
2) அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் எது?
* மனம்
3) ஒருவர் தனது அனுபவங்களை தானே உள்நோக்கி பார்த்து விவரித்தாலும்,அவ்வாறு விவரிக்கப்பட்டவற்றைப் பகுத்தாய்ந்து வகைப் படுத்துதலும் அகநோக்கு முறையாகும் என்று கூறியவர் யார்?
*உண்ட்டு (Wundt)
4) படத்தை திரையில் பார்ப்பது உற்றுநோக்கல்.அதை மனதால் "சிறந்த படம் " அல்லது "மோசமான படம்" அல்லது "சுமாரான படம்" என எண்ணி பார்ப்பது ?
* அகநோக்கு
5) ஒருவனது புலன் உணர்ச்சிகள், அவற்றுள் தோன்றும் மனபிம்பங்கள்(images),பின் பிம்பங்கள் (after images),சிந்தனை முதலியவற்றை ஆராய சிறந்த ஒரேமுறை - அகநோக்கு முறை
6) பிறரது நடத்தையை கூர்ந்து கவனித்தறிதல் உற்றுநோக்கல் (Observation ) எனப்படும்.
7) உற்றுநோக்கல் முறையின் நான்கு செயல் நிலைகள்;
* புலன் காட்சி (நடத்தையை உணர்தல்)
* நடத்தையே குறித்துக் கொள்ளுதல்.
* சேகரிக்கப்பட்ட நடத்தைக் கூறு விவரங்களை பகுத்து ஆராய்தல்.
* பொது உண்மைகளைப் பெறுதல்.
8) வாழ்க்கை நிகழ்ச்சிகளை தொகுத்து வைத்தால் வாழ்க்கை துணுக்கு முறை (Anecdotal Method) எனப்படும்.
9) பெரும்பாலும் அசாதாரண நடத்தை மட்டும் குறிக்கப்பட்டு அதுவே சாதாரண நடத்தையாகக் கருதும் குறைபாடு எந்த முறையின் கீழ் வரும்?
* வாழ்க்கைத் துணுக்கு முறை
10) ஒரு நிகழ்ச்சியை,அது நிகழும் இயற்கையான சூழ்நிலையில் உற்றுநோக்கி ஆராய்தல் கள ஆய்வு முறை (Field Study Method) எனப்படும்.
Part 3 click here
Part 5......
No comments