PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-5கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும் TRB PREPARATION
PG - TRB ;(முக்கியமான வினாக்கள்)
PART-5
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்
பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும்
41) கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்(Controlled observation) என்பது ?
* பரிசோதனை முறை (Experimental Method)
42) 1879 - ம் ஆண்டு ஜெர்மனியின் லீப்ஸிக் நகரில் உளவியல் ஆய்வுக்கூடம் உண்ட்டு என்பவரால் தொடங்கப்பட்டது.
43) பரிசோதனை முறையில் கவனச் சிதைவு என்பது - தனித்த மாறி (Independent variable)
வேலைத்திறன் - சார்பு மாறி (Dependent variable) என்றும் குறிப்பிடப்படும்
44) நம்பகமான முடிவுகள் போன்ற நிறைகளையும், 'எதேச்சைப் பிழைகள்' போன்ற குறைகளையும் கொண்ட உளவியல் முறை ?
* பரிசோதனை முறை
45) குழந்தைப் பருவம் தொடங்கி ஒருவன் முதிர்ச்சியடைய அவனுடைய பண்புகளும் நடத்தைக் கோலங்களும் எப்படி வளர்ச்சியடைகின்றன,எவ்விதங்களில் மாறுபாடு அடைகின்றன என்பதை அறிய உதவும் முறை?
* வளர்ச்சி ஆய்வு முறை ( Development Method)
46) வளர்ச்சி ஆய்வு முறை இருவகைப்படும் ;
i) நீள் ஆய்வு முறை( Longitudinal Method )
ii) குறுக்கு ஆய்வுமுறை (cross sectional Method)
47) ஒரே வளர்ச்சிப் படிநிலையில் உள்ள குழந்தைகளை பல ஆண்டுகள் தொடர்ந்து உற்று நோக்குவது?
* நீள் ஆய்வு முறை
48) நீள் ஆய்வு முறைக்கு எடுத்துக்காட்டு ?
* ஹார்வார்ட் வளர்ச்சி ஆராய்ச்சி
* பியாஜேயின் ஆராய்ச்சி
49) பல வளர்ச்சி நிலைகளிலுள்ளோரது நடத்தையைக் கவனித்து ஒப்பு நோக்கல் - குறுக்கு ஆய்வு
50) குறுக்கு ஆய்வு முறைக்கு உதாரணமாக குழந்தைகளது விளையாட்டுப் பற்றி ஆய்வு நடத்தியவர்கள்? ?
* ஷிர்லி, லான் ஆல்ஸ்டைன்
Part 1......click here
Part 6 ....51 to 60 .Soon..... BE READY
No comments