PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-6 கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன் பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும்
PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-6
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்
பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும்
51) சிறு குழந்தைகளின் வயது அதிகரிக்க அதிகரிக்க விளையாட்டுகளில் சமூகச் செல்வாக்கு அதிகரிக்கின்றது என்று கூறியவர் யார்?எந்த ஆய்வுமுறை?
* ஷிர்லி, லான் ஆல்ஸ்டைன்
* குறுக்கு ஆய்வுமுறை (Cross sectional Method)
52) தனியாள் ஆய்வு முறையின்(case study Method) வேறு பெயர்கள் ;
* மருத்துவ ஆய்வு முறை (Clinical Method)
* 'தனியலகு ஆய்வு முறை'
* நீண்ட திரள் பதிவேட்டு ஆய்வு முறை (Extended cumulative record method)
53) 'ஆம்' , 'இல்லை' , 'நிச்சயமாக சொல்ல முடியாது' என்ற சிறு அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் ஆய்வுமுறை?
* வினா வரிசை முறை ( Questionnaire Method)
54) வினா வரிசை முறையே முதன்முதலில் உளவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியவர் யார்?
* பிரான்ஸிஸ் கால்டன்
55) வினா வரிசை முறைக்கு சிறந்த உதாரணம்?
* வாக்கெடுப்பு (Referendum)
56) ஆராயப்படும் பிரச்சினைகளில் நமது குறுக்கீடின்றி இயற்கையாகவே காணப்படும் இரு மாறுபட்ட அல்லது வேறுபட்ட நிலைமைகளை ஒப்பிட்டு நோக்கி முடிவெடுத்தல் -
வேற்றுமை முறை (Differential Method) எனப்படும்.
57) குழந்தைகள் பிறக்கும் போது உட்கொள்ளப் போதிய அளவு பிராணவாயு இல்லாத நிலைமை -
அனக்ஸியா (Anoxia) ஆகும்.
58) Anoxia நிலையில் பிறந்து வளரும் குழந்தைகளைப் பிற குழந்தைகளுடன் ஒப்பு நோக்கி முடிவெடுத்தல்?
* வேற்றுமை முறை
59) முதிர்ச்சியடைந்த சாதாரண மனிதர்களின் நடத்தையை விவரிப்பது?
* பொது உளவியல் (General Psychology)
60) குழந்தைகளின் வளர்ச்சி, இவ்வளர்ச்சியில் அதன் மரபுநிலை, சூழ்நிலை ஆகியவற்றின் பங்கு, போன்றவற்றை அளவிடும் முறை?
* குழந்தை உளவியல் (Child Psychology)
Part 5 👈
Part 7 Soon
No comments