PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-7கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும்



PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-7
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்
பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும் 


61) சமநிலையினின்றும் பிறழ்ந்து நரம்பு நோய்கள்,) (Neuroses), உளத்தடுமாற்றங்கள் (psychoses) , போன்ற கோளாறுகளால் பீடிக்கப்பட்ட மனிதர்களின் அசாதாரண நடத்தைகளை விவரிக்கும் பிரிவு, நெறிபிறழ் உளவியல் (Abnormal Psychology) ஆகும்

62) நெறிபிறழ் உளவியல் வளர்ச்சிக்கு  உதவியது?

  * பிராய்டின் உளப்பகுப்பாய்வு

63) நரம்பு மண்டலம், புலன்கள்,சுரப்பிகள், போன்றவற்றின் அமைப்பு, செயல்பாடு ,ஆகியவை எந்த பிரிவில் இடம்பெறும் ?

  * உடற்கூறு உளவியல் (Physiological Psychology )

64) மனிதனின் நடத்தையுடன், பிற விலங்குகளின் நடத்தையை ஒப்பிடுவது ?

  * ஒப்பீட்டு உளவியல் (Comparative Psychology )

65) ஒரு குழு உறுப்பினராக உள்ள தனிமனிதனின் நடத்தை பற்றியும், குழுக்களுக்குள் காணப்படும் தொடர்புகள் பற்றியும் விவரிக்கும் உளவியல் பிரிவு?

  * சமூக உளவியல் (Social Psychology)

66) நடைமுறை உளவியல் (Applied ;

  * தொழில் பற்றிய உளவியல் (Industrial)

  * விளம்பரம் பற்றிய உளவியல் (Advertising)

  * கல்வி உளவியல் 
         போன்றவை நடைமுறை உளவியல் பிரிவுகள் ஆகும்.

67) தொழில் உளவியலின் வளர்ச்சிக்கு உதவியவர்?

  * மையர்ஸ் (myers)

68) பொய்பேசுதலைக் கண்டுபிடிக்கும் முறைகள்,எந்த உளவியல் பிரிவின் கீழ் வரும் ?

 * குற்றவியல் உளவியல் (Crime)

69) இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உளவியல் ஆராய்ச்சிகளின் விளைவாக உருவானது?

 * 'மனிதப் பொறியியல்'(Human Engineering)

70) கல்வி உளவியலுக்கான வரையறையைக் கூறியவர்? 

   * கோலெஸ்னிக் ( Kolesnik )

 

No comments

Powered by Blogger.