PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-8கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும்
PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-8
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்
பாடம் 1 ;கல்வி உளவியலின் தன்மையும், வரம்பும்
71) மனித நடத்தையை முறையாக ஆய்வு செய்யும் அறிவியல்? ?
* உளவியல்
72) கல்வி தத்துவ இயல் -எதை கற்பிக்க வேண்டும் எனக் கூறுகிறது.
கல்வி உளவியல் - அதை எப்படி கற்பிக்க வேண்டும் எனக் கூறுகிறது.
எனக் கூறியவர்கள்?
*ப்ளேர், ஜோன்ஸ், சிம்ப்சன்
73) எச்.சி லிண்ட்கிரேன் (H.C. Lindgren) கருத்துப்படி கல்வி உளவியலின் பாட பொருட்கள், கற்றல் - கற்பித்தல் என்னும் செயல்பாட்டின் ஐந்து முக்கிய கூறுகள்,
i) கற்பவர் (learner)
ii) கற்கும் முறைகள் (Learning Process)
iii) கற்கும் அனுபவங்கள் (Learning Experience)
iv) கற்கும் சூழ்நிலைகள் (Learning Environment)
v) கற்பிப்பவர் ( The Teacher)
74) பொது உளவியலுக்கும் கல்வி உளவியலுக்கும் உள்ள வேறுபாடு எதில் உள்ளது?
* சுட்டிக்காட்டும் பகுதி
75) மனித நடத்தையில் அனைத்து கூறுகளைப் பற்றியும் ஒரு பரந்த ஆய்வினை மேற்கொள்வது?
* பொது உளவியல்
76) வகுப்பறையில் யாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?
* கற்பவர்
77) வகுப்பறையில் உள்ள மூன்றுவித மாணவர்கள்?
* மீத்திறமிக்கவர்கள்
* சராசரியானவர்கள்
* மெதுவாக கற்போர் (Slow Learners)
78) மாணவர்களுக்கு இடையில் உள்ள எதை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் ?
* தனியாள் வேற்றுமைகள்
79) கற்றல் செயல்பாடுகள்
* புலன் காட்சி (Perception)
* சிந்தனை
* ஆய்ந்தறிதல் (Reasoning)
* நுண்ணறிவு (Intelligence)
* நினைவிலிருத்தல் ( Remembering)
80) ஒரு பாடவேளை சமயத்தில் நன்கு மழை பெய்தால் உங்கள்(ஆசிரியர்) செயல்பாடு?
A) விரைவாக பாடத்தை முடிப்பேன்.
B) முக்கியமான பாடத்தை நடத்துவேன்.
C) சிறிதுநேரம் மழையை ரசிக்க வைத்துவிட்டு. பிறகு பாடத்தை நடத்துவேன்.
D) விடாமல் பாடத்தை நடத்துவேன்.
(C )
No comments