வள்ளுவ 🔥 தீ- பாகம் 4


 💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

வள்ளுவ 🔥 தீ- பாகம் 4

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟


💜🏵️தெய்வப் புலவனின் குறள் இன்று 🏵️💜


எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
 தேரான் பிறனில் புகல்.


🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

       குறள் எண் :144

      அதிகாரம்: பிறன் இல் விழையாமை

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟


    💝🌻பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.🌻💝


Thirukural 144: Explanation


However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another?.

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜


💥🌟பாரதியின் அனல் வரிகள்🌟💥


💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜




        🌼மாதர் - பதிவிரதை🌼



    💥 இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப்போகின்றன.

பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகச் சிதறுகின்றன.

💥 பல அநீதிகள் உடைக்கப்படுகின்றன. 

💥பல அநியாயக்காரர்கள்

பாதாளத்தில் விழுகிறார்கள்.


இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது.☘️ பத்திரிகைகள்தான்,இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள்இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள்.☘️


🌀'ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும்' என்றுஎல்லாரும் விரும்புகிறார்கள்.

 🌀அதிலே கஷ்டம் என்ன வென்றால்,ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை.

🌀 ஆண் மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ,

அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே" காட்டுவதில்லை. 

🌀ஒவ்வொருவனும் ஏறக்குறைய தன் இனத்து ஸ்திரீகளைப் பதிவிரதை என்று நம்புகிறான்.


❣️ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாகஇருந்தால் நன்மையுண்டாகும்; பதிவிரதைக்கு அதிக வீரமும் சக்தியும் உண்டு. 

❣️சாவித்ரீ தனது கணவனை எமன் கையிலிருந்து மீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது.

❣️ஆனால், பதிவிரதை இல்லை என்பதற்காக ஒரு ஸ்திரீயை வதைத்து ஹிம்சை பண்ணி அடித்து ஜாதியை விட்டுத் தள்ளி ஊரார் இழிவாக நடத்தி அவளுடன் யாவரும் பேசாமல் கொள்ளாமல் தாழ்வுபடுத்தி அவளைத் தெருவிலே சாகும்படிவிடுதல் அநியாயத்திலும் அநியாயம்.


🦜அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்? கற்பனைக்கணக்குப் போட்டுப் பார்ப்போம். 

🦜ஒரு பட்டணத்தில் லக்ஷம் ஜனங்கள், ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். 

🦜அதில் நாற்பத்தையாயிரம்ஆண்கள் பரஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக்கொள்வோம் அதிலிருந்து குறைந்த பக்ஷம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பரபுருஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும். 

🦜இந்தக் கூட்டத்தில் இருபதினாயிரம் புருஷர்கள் தம் இச்சையை ஓரளவு" நிறைவேற்றுவதாக வைத்துக்கொள்வோம். 

🦜எனவே குறைந்தபக்ஷம் இருபதினாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக இருத்தல்அவசியமாகிறது. 

அந்த இருபதினாயிரம் வ்யபசாரிகளில் நூறுபேர்தான் தள்ளப்படுகிறார்கள்.


🦜 மற்றவர்கள் புருஷனுடன் வாழ்கிறார்கள். ஆனால், அவளுடைய புருஷனுக்குமாத்திரம் அவளவள் வ்யபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது.தெரிந்தும் பாதகமில்லையென்று சும்மா இருப்பாருமுளர்.


💟ஆகவே, பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனே தான் வாழ்கிறார்கள். 

💟இதனிடையே, பதிவிரத்யத்தைக் காப்பாற்றும்பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும்,கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன.

💟சீச்சீ! மானங்கெட்ட தோல்வி, ஆண்களுக்கு! அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை!


🔥🔥இதென்னடா இது! ''என்மேல் ஏன் விருப்பம் செலுத்தவில்லை?''

என்று ஸ்திரீயை அடிப்பதற்கு அர்த்தமென்ன?இதைப்போல் மூடத்தனம் மூன்று லோகத்திலும் வேறே கிடையாது.🔥🔥


🦜ஒரு வஸ்து நம்முடைய கண்ணுக்கு இன்பமாகஇருந்தால், அதனிடத்தில் நமக்கு விருப்பம் இயற்கையிலே உண்டாகிறது.

🦜 கிளியைப் பார்த்தால் மனிதர் அழகென்று"நினைக்கிறார்கள். தவளை அழகில்லை என்று மனிதர் நினைக்கிறார்கள் இதற்காகத் தவளைகள் மனிதரை அடித்தும்,திட்டியும், சிறையிலே போட்டும் துன்பப்படுத்த அவற்றுக்கு வலிமை இருப்பதாக வைத்துக் கொள்வோம் அப்படி அவை செய்தால் நாம் நியாயமென்று சொல்லுவோமா?


💜🌼தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசு செலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜ பக்தி செலுத்த வேண்டுமென்றும் அங்ஙனம் பக்தி செய்யாவிட்டால்,சிறைச்சாலையிலே போடுவோம் என்றும் சொல்லுகிறார்கள்.அப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள்அவமதிக்கிறார்கள்.🌼💜



அந்த அரசுபோலே தான், ஸ்திரீகள் மீது புருஷர்"செய்யும் ''கட்டாய ஆட்சியும்'' என்பது யாவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக விளங்கும்.🌼💜 கட்டாயப்படுத்தி,என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா?


💚♥️💜ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்கவேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்தவேண்டும்.💙💜💙 பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மைப்போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை.🌹🌹🌹அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும்.🌺🌺🌺


    💚📌♥️அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.♥️📌💚

வள்ளுவ 🔥 தீ.....பழைய பாகம் 🍀கிளிக்

வள்ளுவ 🔥 தீ வளரும் 💥💥💥💥

👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍


🦚🍀இன்றைய இனிய சிந்தனை...


    காலம் தந்துள்ள எத்தனை எத்தனையோ ஆசிர்வாதங்கள் நம் வாழ்வில் கொட்டிக் கிடக்க,💚💚

   துன்பங்களை எண்ணி துவண்டு அழுவதில் லாபம் இல்லை..💝💝

எல்லா துக்கங்களும் நீண்ட காலம் ஏன்! நீண்ட நேரம், விநாடி கூட நீடிக்கப் போவதில்லை.💜💜.

கடந்து செல்வோம் இன்ப துன்பங்களை எல்லாம்..🌼🌼

விரைந்து வளமுடன் வாழ நாடுவோம் இன்பத்தை அனுபவிக்க💙💙

 நல்வாழ்வு நம் அருகில்🌹🌹

வாழ்க வளமுடன் வையகம் 👏

அன்புடன் வணக்கம் 🙏


 

No comments

Powered by Blogger.