வள்ளுவ தீ 🔥- பாகம் 5
💜தெய்வப் புலவனின் குறள் இன்று💜
🌈🌈🌈🌈🌈🌟🌟🌟🌟🌟🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
குறள் எண்: 314
அதிகாரம் : துறவறவியல்
🌈🌈🌈🌈🌈🌈🌈🌟🌟🌟🌟🌟🌟🌟⭐🌈🌈🌈🌈🌈🌈
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
English Explanation
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.
🌻பாரதியின் அனல் வரிகள் 💙
பகைவனுக் கருள்வாய்
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🌷🌷🌷🌷🌷🌷🎀🎀🎀🎀🎀🎀
பகைவனுக் கருள்வாய் -- நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்.
புகைநடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே -- நன்னெஞ்சே
பூமியிற் கண்டோமே.
பகை நடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே
பூமியிற் கண்டோமே.
பகை நடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான்.
(பகைவனுக்) - 1
(பகைவனுக்) - 1
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ -- நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்கொடி வளராதோ? -- நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்கொடி வளராதோ? -- நன்னெஞ்சே
(பகைவனுக்) 2
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? -- நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? -- நன்னெஞ்சே
(பகைவனுக்) 3
(பகைவனுக்) 3
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ? -- நன்னெஞ்சே
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென் சாத்திரங் கேளாயோ? -நன்னெஞ்சே
(பகைவனுக்) 4
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலுவந் தானுமவன் -- நன்னெஞ்சே
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ண னன்றோ? -- நன்னெஞ்சே
(பகைவனுக்) 5
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய் -- நன்னெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள் அவளைக் கும்பிடுவாய் -- நன்னெஞ்சே
(பகைவனுக்) - 6
வள்ளுவ தீ ---- வளரும்🔥🔥🔥
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🎀🎀🎀🎀
வள்ளுவ தீ🔥 - பாகம் 4 இங்கே
🍁🍁இன்றைய இனிய சிந்தனை🍁🍁
ஆழ்மனம் சொல்வதை கேளுங்கள்...
🌳🌳எந்த ஒரு செயல் நாம் செய்ய விரும்பினாலும், அதற்கு நம் மனம் உண்மையாக விரும்பினால் மட்டுமே அதை முழுமையாக செய்ய முடியும்🌳🌳
🎊 பிடித்த விதமாக நமக்கு சாதகமான சூழ்நிலை அமைந்தால் தான், நாம் அந்த காரியத்தை தொடர்ந்து செய்கிறோம்..🎊
🎈🎈சூழ்நிலை சரியாக மாறும் வரை காத்திருப்பது மட்டும் தான் நாம் செய்ய வேண்டிய தவம்...🎈🎈
இறைவன் நினைத்தால் மட்டுமே
இறைவனை நினைத்தால் மட்டுமே
நம் வாழ்வின் அனைத்து வழிகளிலும் பாதைகள் சீராகின்றன.....❤️
ஆழ்மனம் அந்த இறைவன் வசமாகட்டும்..
வாழ்வின் அனைத்து வசந்தங்களும், நம் வாசல் வரட்டும்..💫🐾
அன்பு நெஞ்சங்களுக்கு அன்பைப் பகிர்வோம் 🦋
வாழ்க வளமுடன் அன்பர்களே 💕
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
No comments