வள்ளுவ 🔥 தீ - பாகம் 6 THIRUVALLUVA &BHARATHI
🦋தெய்வப் புலவனின் குறள் இன்று 🦋
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
குறள் எண்: 69
. அதிகாரம் : மக்கட்பேறு
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
TIRUKKURAL ENGLISH EXPLANATION
The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.
🎄 பாரதியின் அனல் வரிகள் 🎄
🐤🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🐤
💙பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?💙
💚கண்டார்க்கு நகைப் பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடைக் குழப்ப மன்றோ?💚
🧡உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோ? உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஒளவை: -- “அன்னையும் பிதாவும்”
பாரிடை “முன்னறிதெய்வம்” என்றாள் அன்றோ? 🧡
🔴தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ?
தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?🔴
💛💛மனைவியொருத் தியையடிமைப் படுத்தவேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
தாயைப்போ லேபிள்ளை என்று முன்னோர்
வாக்குளதன் றோ? பெண்மை அடிமை யுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ? 💛💛
❇️வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்;❇️
❇️நாட்டினிலே
நாடோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான்;❇️
🐦🦜காட்டிலுள்ள பறவைகள்போல் வாழ்வோம் அப்பா;🦃🦚
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை;💕🦆🕊️
🌷பாட்டினிலே காதலைநான் பாட வேண்டிப்
பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே.🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வள்ளுவ 🔥 தீ வளரும் 🔥🔥🔥🔥
🧡💚இன்றைய இனிய சிந்தனை 🧡💚
❇️🐾நம்மை வெற்றிப் படியில் ஏற்றுவது நம் சூழ்நிலைகளை விட நம்முடைய சிந்தனைகள் தான்....
❇️ 🐾காலங்கள் நம்மை அழைத்துச் செல்லும் இடம் நிச்சயம் சரியானதாக இருக்கும்...
❇️🐾உணர்ந்து கொள்ள சிறிது காலம் வரை காத்திருப்பது மட்டும் போதும்..
❇️🐾மாற்றங்கள் தரும் இனிய பொன்னான தருணங்கள் மலரவே சில சங்கடமான சூழல் நம்மைச் சுற்றி ஏற்படும்...காத்திருப்போம் கனிவுடன்..
❇️🐾 கற்பனையின் சிறகுகள் விரியட்டும்..
❇️🐾கண்ணில் படும் வாய்ப்புகள் தன் வசமாகட்டும்..
ஆத்ம நட்புடன் அன்பைப் பகிர்வோம்
வாழ்க வளமுடன்..
No comments