நம்மை அறிவோம் 🎊🌷நூறாண்டு வாழலாம்..BHARATHIYAR
நம்மை அறிவோம் 🎊🌷
நூறாண்டு வாழலாம்..
-✍️BHARATHIYAR
உடம்பை வலிமை செய்வதற்கு மன வலிமை வேண்டும்.
உடம்பு, நாடிகளுக்கு வசப்பட்டது.
நாடிகள் மனதின் வசமாகும், ஆகையால் உடம்பிலுள்ள நோய்களைத் தீர்த்து வலிமை யேற்றுவதற்கு, மனவுறுதி, நம்பிக்கை, உத்ஸாகம் முதலிய குணங்கள் பிரதானமாகக் கொள்ளத் தகும்.
💝🥬🥦🌽🍇🥥🥦🍠🥕🍐🥝🥥🥥🥬🥑🍠🥕
உணவு..
சிங்கம் புலிகளைப்போல் உடல் வலிமையும் அதற்குத் தகுந்த தீனியும் உடையவனைக் கண்டால் யாருக்கும் அவமதிப்பு உண்டாகாது;
சாதாரணமாகப் பயம் உண்டாகும். நானாவிதமான விலையுயர்ந்த உணவுப் பொருள்களைத் தின்றால்தான் உடம்பிலே பலம் வருமென்று சிலர் நினைக்கிறார்கள்.
இது தவறு.
காரஸாரங்களும் வாஸனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப் படுத்தும் வஸ்துக்கள் தேக பலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி, கம்பஞ்சோறு இவற்றால் பலமுண்டாவது போல் பதிர்ப்பேணியிலும், லட்டுவிலும், வெங்காய ஸாம்பாரிலும் உண்டாகாது.
🌸
பசி
💚💚
சரீரத்தை வியர்க்க வியர்க்க உழைத்தால் நல்ல பசியுண்டாகும். நல்ல பசியாயிருக்கும்போது கேப்பைக்களியை வேண்டுமளவு தின்று சுத்த ஜலத்தைக் குடித்தால் போதும்.
விரைவிலே பலம் சேர்ந்துவிடும்.
🌬️🍂🍂☘️🌿🌱🍃🌺🍂🌊🌴⛄🌬️🌀🍂🍂
பிள்ளைகளை இஷ்டப்படி நீஞ்சுதல்,மரமேறுதல், பந்தாட்டம் முதலிய விளையாட்டுக்களிலே போகவொட்டாதபடி தடுக்கும் பெற்றோர் தாமறியாமலே மக்களுக்குத் தீங்கு செய்கிறார்கள்.
💚💚
வயது
மேலும் சரீர உழைப்பும் விளையாட்டுக்களும் மிகவும் வாலிபப் பருவத்திலே யிருக்கும் பிள்ளைகளுக்கு மாத்திரந்தான் பொருந்துமென்று ஒரு தப்பெண்ணம் சிலரிடம்ஏற்பட்டிருக்கிறது.
மனிதனுக்கு இயற்கை வயது நூறு. ஆகையால் ஐம்பது வயதாகும்வரை ஒருவன் இளமை தீர்ந்தவனாகமாட்டான். பிஞ்சிலாயே உடம்பை நாசப்படுத்தினால் சீர்கெட்டுக் குலைந்துபோய் இருபது வயதாகுமுன் கிழத் தன்மை வந்துவிடும்.
🤽🏊🏄⛷️⛷️🤺🚴🚵🧗🤼🤼🚣🏂⛷️🧗🤼🤼
எனினும், இயற்கை விதிப்படி ஐம்பதுவயதுவரை இளமை நிற்குமாகையால், அதற்குள்ளே 'செயற்கைக் கிழத்தன்மை' பெற்றோர் தமதுடம்பைத் திருத்தி நல்ல நல்ல நிலைமைக்குக் கொண்டுவர முயற்சி செய்யலாம்.
ஐரோப்பாவிலே ஐம்பது வயதுக்காரர் ஆடியோடி விளையாடுவதும், பந்தடிப்பதும், கூட்டங்கூடிக் குதிப்பதும் சாதாரணமாகப் பார்க்கலாம்.
🌊🌵🌱🌷🌺🌻🌻🍀🍀🍂🍁🍁🌫️🌀🌵🌳🌳
நமது நாட்டுக் கல்வியாளர் சிலர் முப்பது வயதிற்கு முன்னமே தம்மைக் கிழவர் களாகப் பாவனை செய்துகொண்டு, ஜீவகளை யில்லாமல் ஸஞ்சரிக்கிறார்கள்.
🦚🦚
பெரிய மனுஷத்தன்மை
🌺🌻
இன்னுமொரு தொல்லை. பெரிய மனுஷத்தன்மைக்கும் சரீரவுழைப்புக்கும் விரோதம் என்று நம்மவர்களில் சிலரின் மனதில் எந்தப் பிசாசோ எழுதி வைத்துவிட்டது.
ஆகையால், சொற்பப் பணமுடையன்கூட, தனக்கு ஜலம் கொண்டு கொடுக்க ஓராளும், குளிப்பாட்ட ஓராளும், தலை துவட்ட ஓராளும்வைத்துக்கொண்டு, பாயோடே கிடக்கும் கிழவியைப்போல் நடந்துகொள்கிறான்.
❣️💌💞💢💕💌✨💤💬💭💭🔥✨💕💓💗💗
மாதம் முப்பது ரூபாய் சம்பளம் வந்தால் போதும். வீட்டிலே அவன் பெரிய நவாப். கைகாலை அசைக்கமாட்டான்.
மேல் மாடத்திலே போய் ஒரு புஸ்தகம் அல்லது மேல் வேஷ்டிஎடுத்துக்கொண்டு வரவேண்டு மானால் அவன் போகமாட்டான்.
பந்துக்களை ஏவுவான். வயதிலே சிறியவராக யிருந்தால் அவர்களை விலையடிமைபோலே நடத்துவான். அற்பக்காரியங்களுக்கெல்லாம் ஒருவரையொருவர் வேலையேவி வதைக்கும் தொல்லை நமக்குள்ளேமிகவும் அதிகம்.
🌻🏵️
முடிவுரை
☘️🌠
எவனும் உடம்பை உழைப்பினாலும், அசைவினாலும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மனதை உத்ஸாக நிலையில் வைத்துக்கொண்டால் உடம்பிலே தீவிரமுண்டாகும்.
🎄🎍🎑🎏🥈🎀🎈🎊🎍🎋🏆🥉🥈🎎🎍🎄
உடம்பைத் தீவிரமாகச் செய்துகொண்டால் மனது உத்ஸாகத்துடனிருக்கும். மனத்தளர்ச்சிக்கும் இடம் கொடுக்கலாகாது.
கவலை மனிதனை அரித்துக் கொன்றுவிடும். பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.
☘️🌠
இயன்றவரை இந்திரிய இன்பங்கள் கூடாது என்று நான்சொல்லவில்லை. அவை பரமாத்மாவினால் நியமிக்கப் பட்டன. ராமன்,கிருஷ்ணன் முதலிய அவதார புருஷர்கள் உலக இன்பங்களை நீக்கித்துறவு கொள்ளவில்லை.
ஆனால் இந்திரிய சுகங்களுக்கு வசப்பட்டுப் போகலாகாது. அதனால் தேகபலம் அழிந்து மேற்படி இந்திரிய சுகங்களை நீடித்து வனுபவிக்க வழியில்லாமற் போய்விடும்.
அறிவுதான்ராஜா; மனமும், இந்திரியங்களும் உடம்பும் அறிவுக்கடங்கிவாழவேண்டும்: இல்லாவிட்டால் அவற்றுக்கே கெடுதியுண்டாகும்.
🏵️🌻🌻🌺💚💚🦜🌺🌺🌼🍀🌟💙🌼🔥💝
எனவே, மனவுறுதி, ஸந்தோஷம், உலகை நடத்தும் சக்தி நமக்கு நன்மை செய்யுமென்ற நம்பிக்கை, சரீரவுழைப்பு முதலிய நற்குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை வழக்கப்படுத்தவேண்டும்.
🌹🦚🦚🦚🌹🌹🌹🌹🦚🦚🦚🦚🦚🦚🦚🌹
உடம்பிலே நோயில்லாமல் வலிமையுடன் இங்கே நூற்றாண்டுவாழலாம்.
🌹🌹🌹🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹🦚🦚
No comments