அன்பின் மொழி எது!!!?🌹🌹🌹-மௌனமா?💚வார்த்தைகளா ?💜
அன்பின் மொழி🌹🌹🌹எது!!!!
மௌனமா?💚வார்த்தைகளா ?💜
🌺உண்மையில் அன்புக்கும், பேச்சுக்கும் தொடர்பு இல்லை.
அன்பிற்கும் மௌனத்திற்கும் இடையே தான் உண்மையான தொடர்பு உள்ளது.
🌺உண்மை அன்பு இருக்குமிடத்தில் மௌனம் நிலவும். அங்கு வார்த்தைகள் இல்லை அன்பு மட்டுமே அங்கு நிலவும்.
🌺அலைகளும், சலனமும் அற்ற ஒரு அமைதியான ஏரியை போல், உண்மை அன்பு தோன்றும் போது மனதில் எந்தவிதமான சலனமும் இருக்காது.
🌺கவனம் சிதறுவது, கவனக் குறைவு அல்லது ஏதாவது தடங்கல் போன்றவை மனம் என்னும் ஏரியில் தோன்றும் அலைகள் ஆகும்.
🌸உண்மை அன்பு மனதின் ஆடாத, அசையாத நிலையில் தோன்றுகிறது.
🌸அந்த சலனமற்ற நிலையில் மௌனத்தை உணரலாம் மனதின் பேச்சுகள் அங்கு நின்று விடுகின்றன.
🌸உண்மை அன்பை அந்த மௌனத்தில் உணரலாம்.மௌனம் ஒன்றே தூய அன்பின் மொழியாகும்.
🌸உண்மையான அன்பு இதயத்தில் இருக்கிறது. இதயத்தில் இருக்கும் அன்பை விளக்கிச் சொல்ல முடியாது. அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. இதயம் வார்த்தைகளுக்கான இடமல்ல.💝💝
வார்த்தைகள் அறிவிற்கு உரியவை. அறிவு பேச முடியும். ஆனால் அது ஒரு ஒலிப்பதிவுக் கருவியை போன்றதே. அது வார்த்தைகளை பதிவு செய்து அதை வார்த்தைகளை வெளியே தள்ளிக் கொண்டே இருக்கிறது அந்த வார்த்தைகள் உணர்வற்ற வெறும் வார்த்தைகள்.💝💝
அறிவினால் கருணையை உணர முடியாது. அன்பையும் கனிவையும், அறிய முடியாது.🌟🌟
🌹ஏனெனில், அறிவு காரணத்தை கண்டுபிடிக்க முயல்கிறது. அன்பையும் கருணையையும் கூட அது ஆராய்ந்து பார்க்கிறது.☘️☘️
🌹எங்கு அளவுக்கு மீறிய பேச்சு இருக்கிறதோ அங்கு அன்பு இருக்காது.உண்மையில் அன்பு செலுத்தும் ஒருவர் பெரும்பாலும் தியானம் செய்யக்கூடிய மனநிலையில் இருப்பார்.
🌹அன்பு பெருகும் போது எண்ணங்கள் வருகின்றன உண்மையான அன்பு நிறைந்தவர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி விடுகிறார். அவர் சிந்தித்துக் கொண்டே இருக்க மாட்டார்.
🌹அவருடைய எண்ணம் எல்லாம் அவர் அன்பு செலுத்துபவர் பற்றியதாகவே இருக்கும். அதனால், அவர் மனதில் பலவிதமான சிந்தனை ஓட்டங்கள் இருக்காது.
🌹அவர் மனம் எல்லாம் ஒரே எண்ணமே நிறைந்து இருக்கும் ஒரே ஒரு எண்ணம் ஆக இருப்பதால் அங்கு மனமே இருக்காது.
💙அன்புக்குரிய பொருளின் மீதோ அல்லது நபரின் மீது ஆன தொடர்ந்த, ஒருமுகப்பட்ட, மனம் குவிந்த எண்ணமும் வார்த்தைகளும், பேச்சும் அவரது இதயத்தின் அடித்தளத்தை சென்றடையும்.
💙அப்போது விளக்கங்கள் அனைத்தும் நின்றுவிடுகின்றன. ஏனெனில் அந்நிலையில் எதையும் விளக்கி சொல்ல முடியாது. அன்பு செலுத்தும் நபர் ஒரு தியான நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்
💙அந்த நிலையில் இருவரும் அன்பு செலுத்தும் வரும், செலுத்தப்படுபவரும் ஒருவர் ஆகிறார்கள்.
💙உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் தியானம் மேலோங்கி நிற்கும்.
💚அந்நிலையில் ஒருவர் மௌனமாகி அந்தராத்மா வில் ஒன்றி அமைதி அடைகிறார். ஆத்மாவில் அமைதியற்று இருக்கும் போது பேச முடியாது.
💚இந்த காலத்தில் உண்மையான அன்பு நிறைந்தவரின் மௌனத்தையோ, ஆழ்ந்த தியானத்தையோ
யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
💚தியானத்தின் மௌனத்தை பற்றி தெரியாதவர்கள், அவரை விசித்திரமான, அவர் சித்தம் கலங்கியவர் என்றே நினைப்பார்கள்.
💚இவர்களுக்கு வார்த்தைகளைப் பற்றி தான் தெரியும்;🏵️இவர்கள் அறிந்த அன்பு, வார்த்தைகள் இன்றி இருக்க முடியாது. வார்த்தைகள் இன்றி அன்பை வெளிப்படுத்தவே முடியாது, என்று அவர்கள் எண்ணுகிறார்கள்🌟🌟
♥️ஆனால் உண்மையான அன்பில், நாம் நேசிப்பவர் உடன் ஒன்று கலந்து இருக்கும் மனநிலையில், வார்த்தைகளுக்கு இடமில்லை.🌻🌻
♥️மௌனமாகவும் அமைதியாகவும் இருப்போம். அதுவே இடைவிடாத ஒன்று கலந்த பிரிக்க முடியாத தியான நிலையாகும்.✨✨
🍀🍀🍀🍀♥️♥️♥️♥️💚💚💚♥️♥️♥️♥️🍀🍀🍀🍀
மாதா அமி்தானந்தமயி அருள் மொழிகள்.
No comments