PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-13கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம்-3 வளர்ச்சி, முன்னேற்றம், முதிர்ச்சி
PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-13👍
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்🌟
பாடம்-3 வளர்ச்சி, முன்னேற்றம், முதிர்ச்சி 🌻🏵️🙏
121) கருவுற்ற நிலையில் இருந்து பிறப்பு வரை, எடை எத்தனை மடங்கு அதிகரிக்கும் ?
* 11,000,00
122) மிகச்சிறிய கருமுட்டையில் இருந்து சுமார் 3.25 கிலோகிராம் எடையும் சுமார் 50 சென்டிமீட்டர் நீளமுள்ள உயிரியாக குழந்தை வளர்ச்சி பெறுகிறது.
123) 'Neonate' என்பது?
* பிறந்தவுடன் சிறுகுழந்தை
124) 'முன்னேற்றம்' என்பதன் அளவீட்டுக் கூறு (Quantitative measure) - வளர்ச்சியாகும் (Growth).
125) வளர்ச்சி, முதிர்ச்சி ,கற்றல் இவற்றின் கூட்டு விளைவால் ஏற்படுவது ?
* முன்னேற்றம் (Development)
126) அறிவுசார் திறன்கள், நாட்டம், ஆர்வம், நுண்ணறிவு ஆளுமை, போன்ற கூறுகளில் ஏற்படும் முன்னேற்றத்தில் தனியாள் வேற்றுமைகள்(Individual differences) காணப்படுகின்றன.
127) கைகளை இயக்கத் தொடங்கிய பின்னரே விரல்கள் இயக்கம் ஏற்படுகிறது என்பது எதற்கு உதாரணம்?
* "முன்னேற்றம்" என்பது பொதுமைத் துலங்களில் ஆரம்பித்து குறிப்பிட்ட சிறப்புத் துலங்களில் நிறைவடைகிறது.
128) வளர்ச்சியின் பெரும் எல்லைக்குப் பெயர் ?
* 'முதிர்ச்சி'(Maturation)
129) முன்னேற்றம் தொடர் நேர்கோடாக அமையாமல், சுருள் வடிவில் (Spiral)அமைகிறது.
130) W.N கெல்லாக், L.A.கெல்லாக் ஆகியோர் நடத்திய சோதனை எதற்கான விளக்கம்?
* முதிர்ச்சி, கற்றல், முன்னேற்றம் இவற்றுக்கு இடையிலான தொடர்பு
Part 14 தொடரும்.....
No comments