PG - TRB ;(முக்கியமான வினாக்கள்) PART-14கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்பாடம்-3 வளர்ச்சி, முன்னேற்றம், முதிர்ச்சி



PG - TRB ;
(முக்கியமான வினாக்கள்) 
PART-14


கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்


பாடம்-3 வளர்ச்சி, முன்னேற்றம், முதிர்ச்சி
 

131) முதிர்ச்சி, கற்றல், முன்னேற்றம் இவற்றுக்கு இடையேயான தொடர்பை மனிதக்குழந்தை, மனிதக் குரங்கு இடையே சோதனை நடத்தி கண்டறிந்தவர்கள்? 

 * W.N கெல்லாக், L.A கெல்லாக்

132) 'ஒரு கரு இரட்டையர்' சோதனை நடத்தியவர்கள்?

 * கீஸல் ,தாம்சன் 

133) ஒரு குழந்தையின் பிஞ்சு விரல்கள் பென்சிலை பிடித்து நன்கு இயக்கி எழுத ஆரம்பிக்கும் தயார் நிலை(முதிர்ச்சி)  அடைய ஆகும் வயது?

  * 5 வயது

134)  உடற்கூறு வளர்ச்சியை காட்டும் சின்னங்கள்?

 * உடல் எலும்புகளின் முதிர்ச்சியும், நிலையான பற்கள்(Permanent Teeth) முளைப்பதும்

135) மனவளர்ச்சி அல்லது அறிவுத்திறன் வளர்ச்சிகள்;

 * கற்பனை செய்தல் (Imagination)

 * சிந்தித்தல் (Thinking) 

 * ஆராய்ந்தறிதல் (Reasoning)

 * புலன் காட்சி (Perception)

 * நினைவிலிருத்தல் (Remembering)

 * வேறுபடுத்துதல் (Discrimination)

* பொதுமைப் படுத்துதல்(Generalisation)

* தொடர்புபடுத்துதல் (Association) 

136) சமூக வளர்ச்சி என்பது, சமூகத் தொடர்புகளை முதிர்ச்சி பெறுதல் என்பதே. எனக் கூறியவர் ?

 * ஹர்லாக்

137) 'தான்' என்ற உணர்வைத் தாண்டி 'நாம்'என்ற உணர்வோடு குழந்தை  இயங்குதல்?

 * சமூக வளர்ச்சி (Social Development)

138)சமூக வளர்ச்சியில் அடங்கியுள்ள இரு முக்கிய நிலைகள் ;

 * சமூக உணர்வு பெற்றுத் திகழ்தல்

 * சமூகச் செயல்களில் பொறுப்புடன் பங்கேற்றல்

139) குழந்தைகளிடம் சமூகவியல்பு வளர்ச்சியை ஏற்படுத்துதல் 'சமூக நெறிப்படுத்தும் செயல்முறை' என்பர்.

140) உருப்பெருக்கம் ஏற்படுவதை குறிப்பது?

 * வளர்ச்சி   



Join TELEGRAM HERE


PG TRB PSYCHOLOGY உளவியல்❤️
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பானஉளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்

👍🌻🏵️🏵️

No comments

Powered by Blogger.