தீபாவளி என்றால் என்ன?ஏன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் சிறப்புகள்;



தீபாவளி என்றால் என்ன?ஏன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது? 

அதன் வரலாறு மற்றும் சிறப்புகள்;


தீபாவளி ;(deepavali, Diwali)


   * தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது, வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியை கொடுக்கும் ஒரு பண்டிகை ஆகும்.


வரலாறு ;(ஏன் கொண்டாடப்படுகிறது)

   * இதிகாச கதைகளின் படி, இப்போது உள்ள நேபாளத்திற்கு அருகே உள்ள "பிரக்யோதிஸ்பூர்"என்ற நாட்டின் மன்னன் நரகாசுரன். 

  (நர - மனிதன்)  +(சூரன் - அசுரன்)  மனித அசுரன் = நரகாசுரன்

  * மனிதர்களுக்கு மட்டுமல்லாது தேவர்களுக்கும் மிகவும் மிரட்டலாக அச்சுறுத்தலாக விளங்கியவன் நரகாசுரன் 

எண்ணை தேய்த்து குளிக்க காரணம்.


 * அவன் வாங்கிய வரத்தின் காரணமாக, வேறு அவதாரம் எடுத்து கிருஷ்ணபகவான் அதிகாலையில் அவனை வதம் செய்து எண்ணை தேய்த்து தலை முழுகினார்.

   * இதன் காரணமாகவே தீபாவளி அன்று இன்றளவும் நாம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.

சிறப்புகள் ;

 * தீபாவளி இந்துக்கள் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையாகும்.

 * இந்தியா மட்டுமல்ல ஏனைய உலகம் எங்கும்  இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

 * இந்நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டு, வெடி வெடித்து, பரிசுகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். 

 * இரவில் தீபம் ஏற்றுகின்றனர்.
 

 

No comments

Powered by Blogger.