நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் எதையும் சந்தோஷமாக்க சின்ன சின்ன வழிகள் இதோ...A good news for you
அடுத்தவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படாமல் வாழ்த்த கற்றுக் கொள்ளவேண்டும்.
அளவான கேளிக்கைகள் பயணங்கள் வழிபாடுகள் என்று கூட்டாக கொண்டாட முன்வரவேண்டும்.
அடுத்தவர் ஏதாவது ஒரு தவறை தெரியாமல் செய்து விட்டால் அதை மறந்து மன்னிக்கும் மனிதத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்..
எதையும் நம் கண்ணோட்டமாக பார்க்காமல் சம்பந்தப்பட்டவரின் கண்ணோட்டமாக அவர் நிலையிலிருந்து பார்த்த பின்பே நிறை குறைகளைப் பற்றி பேச வேண்டும்.அவரை விமர்சித்தல் வேண்டும்.
எதையும் பாசிட்டிவாக அணுகி குறைகளை மெல்லச் சொல்லி நிறைகளை பெருமைப்படுத்தி அனைவரையும் அன்புடன் நடத்த பழக வேண்டும்.
நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் எதையும் சந்தோஷமாகவும் சின்ன சின்ன வெற்றிகளைக் கொண்டாடவும் கற்றல் அவசியம்.
இவ்வுலகில் நம்மிலும் துன்பப்படும் ஒரு அனைவரும் நம்மை இறைவன் இந்த நிலையில் வைத்திருக்கிறானே அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்கிற திருப்தி மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய் வரவேண்டும்.
பல இன்னல்கள் இருப்பினும் தங்கள் தன்னம்பிக்கையாலும் விடா முயற்சியாலும் வெற்றி பெற்று உலகிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும், நம்பிக்கைவாதிகளை தாராளமாக பின்பற்ற பழகுதல் வேண்டும்.
நல்லனவற்றை கொண்டாடாமல் விட்டால் 20 வயது தொடங்கி, வாழும் காலம் முழுமைக்கும் ஸ்ட்ரெஸ், டிப்ரஷன், டென்ஷன், விதவிதமாய் நோய்கள் என இன்று உடலையும் மனதையும் ஆக்கிரமிக்கும் தீய சக்திகளால் நாம் திருடப்படத்தான் வேண்டும்.
அவ்வாறன்றி, ஒவ்வொரு நாளும் இறப்பை நோக்கி போய்க் கொண்டிருக்கும் மனித வாழ்வில் சின்ன சின்ன சந்தோஷங்களை கூட ஆர்வத்துடன் கொண்டாடி மகிழ்வோம். அதன் மூலம் உடல் மன ஆரோக்கியம் அதிகம் பெற்று ஆயுளை நீட்டிப்போம்.
No comments