முருகன் தெய்வானை திருமணம் செய்ய முன் நடந்த அற்புதக் காட்சி - கந்த புராணம் kantha puraanam
முருகன் தெய்வானை திருமணம் செய்ய முன் நடந்த அற்புதக் காட்சி -
கந்த புராணம்
🌠அவனியெல்லாம் போற்றும் எங்கள் ஆறுமுகப் பெருமானை நிறைகுடத்தில் தோய்ந்த தருப்பையின் தூய நீரை தூவி ஆசி கூறி அருந் தவ முனிவர்கள் எதிர்கொண்டு ஏத்தி நின்றனர்.
🌟தேவ மாதர்களும் முனிவர் மாதர்களும் அஷ்ட மங்கலப் பொருள்களை ஏந்தி எம்பெருமான் முன் நின்று துதித்தனர்.
🌠ஒளி விட்டு எரிகின்ற தீபத் தட்டுகளை ஏந்தி சிறப்பித்தனர்.
✨✨அவ்வண்ணம் நிகழ்கின்ற சமயத்தில் உதய சூரியன் போன்று எழிலுடைய முருகவேல் தமது ஊர்தியினின்றும் இறங்கி திருமண மண்டபத்து முதல் வாயிலை அடைந்தார்.
🌟💫அங்கு இந்திராணி காமதேனுவின் அப்பொழுதே கறந்த பாலை மாணிக்கவள்ளத்தில் தாங்கி வேண்டுவோர்க்கு வேண்டிய வாரே வழங்கும் வள்ளலின் திருவடிகளில் அன்போடு அபிஷேகித்து, வணங்கி பல்சுடர் கூட்டியுள்ள தீபக்கலத்தினை மும்முறை சுற்றிப் பூசனை செய்தாள்.
🌟✨ஆறுமுகக் கடவுள் அப்பூசனையை உவந்து ஏற்றருளி வனப்பு மிகுந்த மண்டபத்துக்குள் புகுந்து ஒளிவீசும் உயர்ந்த பீடத்தில் எழுந்தருளி இருந்தார்.
கந்த புராணம்.....
No comments