karthigai 1,karthigai deepam special,கார்த்திகை மாதம் ( karthigai thinam) நாம் மனமார செய்ய வேண்டியது

 


  

🪔 கார்த்திகை மாதம் ( karthigai 

thinam) நாம் மனமார செய்ய 

வேண்டியது:


கார்த்திகை விளக்கு திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப வழிபாட்டிற்கு அகல் விளக்குகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாதம் முழுவதும் மாலை நேரத்தில் வீடுகளின் வாசலில் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.


• கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.




• கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ, விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும்.


🪔 விளக்கு (Vilakku) 

ஏற்றும்போது கவனிக்க 

வேண்டியது:

• நமது கலாச்சாரத்தில் ‘விளக்கு’ என்பது மிக முக்கியமானதாக வணங்கப்பட்டு வந்திருக்கிறது.


• விளக்கை ஏற்றும் போது, அதற்கு விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இப்பொருட்களை உபயோகிக்கும் போது மட்டும் தான், விளக்கின் தீபத்தில் ஓரு ஒளிவட்டம் வெளிப்படுகிறது. இந்த ஒளிவட்டத்தினால் நாம் வசிக்கும் இடம் சுத்தமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


• அது மட்டுமல்லாமல், தீபத்தின் இந்தஒளிவட்டம், அது இருக்கும் விதத்திலேயே, வணக்கத்திற்கு உரியதாக இருக்கிறது.




• விளக்கை ஏற்றும் போது விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.


• நம் கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த ஒளிவட்டம் உதவுகிறது. நம்மைப் பாதுகாக்கும் தன்மை எதுவாக இருந்தாலும் அதை வணங்குவது நம் பண்பாடு. எனவேதான், பூஜையறையில், கடவுளை வணங்கும்போது தீபத்தையும் ஏற்றிவணங்குகிறோம்.


  • கார்த்திகை அன்று மாலையில் வீட்டிலிருக்கும் எல்லா விளக்குகளையும் ஏற்ற வேண்டும். 
  • வாசலில் சிறு விளக்குகளை ஏற்றிவைக்க வேண்டும். 
  • இந்த தீபச்சுடர்கள் எங்கும் பிரகாசிப்ப தைக் காணும்போது மகிழ்ச்சி பெருகுவதுடன் பக்தியும் சுரக்கும்.


இறைவழிபாட்டிற்கு மிகச்சிறந்த மாதம் கார்த்திகை மாதம் அதை இனிமையுடன் வரவேற்போம்..
வளமான வாழ்வு வாழ்வோம்..





No comments

Powered by Blogger.