PG - TRB ; Psychology (முக்கியமான வினாக்கள்) PART-17கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்அலகு - III அறிவுதிறன் வளர்ச்சி(Congnitive Development)பாடம் 5 கவனித்தல் (Attention)
PG - TRB ; Psychology (முக்கியமான வினாக்கள்) PART-17
கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல்(PSYCHOLOGY OF LEARNING AND HUMAN DEVELOPMENT) - பேராசிரியர் கி.நாகராஜன்
அலகு - III அறிவுதிறன் வளர்ச்சி(Congnitive Development)
பாடம் 5 கவனித்தல் (Attention)
161) உரு, பின்னணி போன்ற வார்த்தைகளை கவனித்தலில் பயன்படுத்தியவர்?
* ரூபின்
162) தனித்தன்மையும், முழுமையும் பெற்ற புலன்காட்சி அனுபவம்?
* உரு
163)' உரு' என்பது கவனப் பரப்பின் மையத்தில் ஆழம்,திடத்தன்மை,(Solidity) திட்டமான எல்லைகள்(Good contour) போன்றவை பெற்று காணப்படும்.
164) கவனித்தலின் கூறுகள் ;
* மனவெழுச்சி
* முயற்சி
165) "ஒரு பொருளைத் தெளிவாக அறியச் செய்யப்படும் முயற்சியே கவனம்" ஆகும். என்று கூறியவர் ?
* மக்டூகல்
166) கவன வீச்சு (வரையறை)
* ஒரே பார்வையில், மிகக்குறுகிய நேரத்தில், எத்தனைப் பொருட்களை அல்லது தூண்டல்களை ஒருவன் உணர்ந்து அறிகிறான் என்பதே அவனது கவன வீச்சு என்று வரையறுக்கப்படுகிறது .
167) கவனவீச்சை அளந்து அறியும் கருவி?
* கவனவீச்சறி கருவி (Tachistoscope)
168) முதிர்ச்சி அடைந்த ஒருவனது கவனவீச்சு 6 அல்லது 7 ஆக இருக்கும்.
169) வேகமாக செல்லும் வாகனங்களுக்கு 4 முதல் 6 வரையிலான எண்கள் தரப்படுவதற்க்கு காரணம் ?
* கவனயீர்ப்பு
170) தொடர்ந்து ஒரு பொருளின் மீது எத்தனை விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது?
* 10 வினாடி
No comments