Being a woman is priceless..மகளிர் உலகம்.Dear Men just listen

 


பெண்.........


● அவள் பெயரை மாற்றுகிறாள்.

● அவள் வீட்டை மாற்றுகிறாள்.

● அவள் தன் குடும்பத்தை விட்டு வெளியேறுகிறாள்.

● உங்களுக்குள் இணைந்து வாழ்க்கையை தொடங்கி,

● சுகமான குடும்பத்தை உண்டாக்குகிறாள்.

●அன்புடன் கர்ப்பமாகிறாள், கர்ப்பம் அவளது உடலை எப்படி எல்லாமோ மாற்றுகிறது.



● அவள் எடை கூடுகிறாள்.

● குழந்தை பிறக்கும் போது கிட்டத்தட்ட பிரசவ அறையில் உயிர் போகும் தாங்க முடியாத வலியில் துடிக்கிறாள்.

● அவள் பெற்றெடுக்கும் குழந்தைகள் கூட உங்கள் பெயரைத் தாங்கும்.. ————————————————————

அவள் இறக்கும் வரை.. அவள் செய்யும் அனைத்தும்... சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, உங்கள் பெற்றோரைக் கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது, சம்பாதிப்பது, உங்களுக்கு உற்ற துணையாக அறிவுரை கூறுவது,நீங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுவது, குடும்ப உறவுகளை பேணுவது என உங்களுக்கு நன்மை பயக்கும் அனைத்தும். .. சில சமயங்களில் அவளது சொந்த உடல்நலம், பொழுதுபோக்குகள் மற்றும் அழகு மேலான ஆர்வங்கள் என்று அவளின் சுய விருப்பங்கள் யாவும் விட்டு உங்களுக்கான நிம்மதியை வாங்கி இருக்கிறாள்..

   

எனில் உண்மையில் யார் உங்களுக்கு எப்போதும் நன்மை செய்யவென்றே நிழலாய் உடனிருப்பவர்??!!!

   

அன்பான ஆண்களே, உங்கள் வாழ்க்கையில் பெண்களை எப்போதும் பாராட்டுங்கள், ஏனென்றால் ஒரு பெண்ணாக இருப்பது எளிதானது அல்ல.

   

பெண்ணாக இருப்பது விலைமதிப்பற்றது.

Being a woman is priceless..

❣️ அவளுக்காக உங்களின் அக்கறையான ‌செயல் இல்லாவிட்டாலும் அது சொல்லிலாவாவது இருக்கட்டும்....



💞ஊக்கப்படுத்தி மகிழ்ச்சி தராவிட்டாலும், வலி ஏற்படுத்தும் வார்த்தைகள் இல்லாமல் இருக்கட்டும்..


💖பொங்கி வழியும் அன்பு இல்லம் அவள் வேண்டி நின்றாலும்,தினம் துயில் கொள்ளும் போது நிம்மதியான வாழ்வு இது என்று அவளின் ஆழ்மனம் ஆனந்தம் அடைய செய்தீர்களேயானால், தலைவணங்குகிறோம் தாய்மையுடன் உங்கள் வாழ்வின் உற்ற துணையாக 🌻💐

 இல்லறம் இனிக்கட்டும்...


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Powered by Blogger.