மகளிர் உலகம்.Women motivation Start புத்திசாலி பெண்

 



     புத்தியுள்ள பெண்👸, புத்தி இல்லாத பெண்😔 வேறுபாடு என்ன? 




புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள்.👫 புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள்.💘🧚💞


புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். 🖤🖤


புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அளித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள்.🫂💥💯


புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். 🤧புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள்.🌟 


இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். 💜💜நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள்.🦅


புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள்.✏️💕 புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள்.🤦🌟


புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள்.நிதானம் இவர்களின் அடையாளம்.💐🌻❣️

 புத்தியில்லாதவள் பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். 


புத்தியுள்ள பெண் பகைவரை சம்பாதிக்க விரும்ப மாட்டாள். 💜

புத்தியில்லாதவளுக்கோ அண்டை வீட்டுக் காரரும் எதிராளிகளே.😔



புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள். 💖💥

புத்தியில்லாத பெண் வேலைக்காரியாகவே வாழ்ந்து முடித்து விடுவாள்.😌🤭


புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள்.🥰👩‍❤️‍👨👪

 புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை.👀💔


புத்தியுள்ள பெண் தனக்கானதை எடுத்துக் கொள்கிறாள்.💝💖 புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள்.👥🤎🙀


புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை.🎊🎊 புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள்.🎉⚡


புத்தியுள்ள பெண் உருவாக்குகிறாள்.💯 புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள்.☠️💢


புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள்.🏋️🤸⛹️ புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள்.🧟


புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள்.🧑‍🦱👱 புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவார்.🤺🤼


புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள்.👪✌️

 புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள்.👿


புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள்.🌺🕯️

 புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான்.👀👥


புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள்.👸💃👜🔒 புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள்.🗡️💣


சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம்.✌️💞

 புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே.🕸️🐾


புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள்.🦚 புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள்.🪶


புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள்.🖊️🖋️📝 புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள்.📚


புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள்.💎⚖️ புத்தியில்லாதவள் எல்லாரையும் தன் முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள்.🎯


புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள்.🎈 புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள்.🤷


புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள்🤦. 

புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும்.🤟


புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். 

மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி.🤺🤦 புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக தான் இருப்பாள்.👪🤩💃


புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள்.👸🌺 புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள்.🤼👥

புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள்.😍😍 புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு.😭🤗


புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் கனப்படுத்துவாள், உயர்வாக எண்ணுவாள்.🧑‍🍼🤱 புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள்.🥀


புத்தியுள்ள பெண் மீதம் எடுக்க சமைப்பாள்.🍲🍛 புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள்.🍽️


புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள்.💎💍🔑🔒 புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள்.🔓🙆 தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள்.🤷🤦



புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள்.👍 புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை…👎

புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும்.👰

 புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது…🥊😬





வள்ளுவனின் வாக்கு🌺

💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

 இல்லவள் மாணாக் கடை.

💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎


🌺🌺🌺🌺🌺🎯🎯🎯🎯🎯🎯🌺🌺🌺🌺🌺🌺

மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.


நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


Translation:


If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?.


Explanation:


There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells.


🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

No comments

Powered by Blogger.