Positive vibes Motivation daily
நல்ல சிந்தனைகள் சில
யாரையும் திட்டாதீர்கள் #சாபம் விடாதீர்கள் கெடுதல் நினைக்காதீர்கள் நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும்
நாம் மனம் வருந்தினாலே
போதும்
நமக்கு பாதிப்பை
தந்தவர்களுக்கு
தண்டனை கிடைத்தேதீரும்.
தொட்டுக் கெட்டவன் #இந்திரன்
தொடாமல் கெட்டவன் இராவணன் சொல்லிக் கெட்டவன் விசுவாமித்திரர். சொல்லாமல் கெட்டவன் #அரிச்சந்திரன் கொடுத்து கெட்டவன் கர்ணன் கொடாமல் கெட்டவன் துரியோதனன் கெட்டவன் என தூற்றும்.
எதை செய்தாலும் உலகம் உன்னை
உனக்கு பிடித்த வாழ்க்கையை யாரையும் காயப்படுத்தாமல் வாழ்..!
கடவுள் நீ கேட்டதை தரவில்லை என்று கவலைப்படாமல் கெட்டதை தரவில்லை என்று #மகிழ்ச்சி கொள்.. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ். இல்லாதவற்றை நினைத்து கவலைப்படாதே. உன்னை படைத்த கடவுளுக்கு தெரியும் உனக்கு எந்த நேரத்தில் எது தேவை என்று. அவன் மேல் நம்பிக்கையுடன் பொறுமையாக இரு. நல்லதே நடக்கும்!
எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். உங்களுக்கு தாங்கவே முடியாத 30 துன்பம் வந்தால்கூட பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதே.. அது உன் நிம்மதியை தொலைக்க வைக்கும்.. காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும் வரை பார்த்துக் கொண்டிரு..!
பிரார்த்தனை என்னும் மாபெரும் ஈர்ப்பு சக்தி..
கடவுளிடம் வேண்டுதல் , பிரார்த்தனை அல்லது தொழுதல் இன்னும் வேறு வேறான சமய பழக்கவழக்கங்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் மனதார விரும்பும் விளைவுகளை பெறுவதற்கு ஆழ்மனதூண்டுதலுடன் கூடிய உருக்கமான பிரார்த்தனை தேவையாகிறது..
பிரார்த்தனை அல்லது வேண்டுதல் நமது வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது ..ஒரு இக்கட்டான சூழலில் உடல்பயத்தாலோ உயிர்பயத்தோலோ நமது பிரார்த்தனை பீறிட்டு பாயும். பல சமயங்களில் ஒரு தலைவருக்காகவோ அல்லது மழை வேண்டியோ ஏதாவது ஒரு முக்கியமான விளைவுக்காக பொதுமக்களும்
பிரார்த்தனை செய்கிறார்கள்..
பிரச்சனையான நேரங்களில் பிரார்த்தனைகள் நம் உதவிக்கு வருகின்றன என்பதில் ஐயமில்லை ஆனால் பிரார்த்தனை நம் வாழ்வில் ஒரு முக்கியமான , ஆக்கபூர்வமான அங்கம் வகிப்பதற்கு பிரச்னைகளுக்காக நாம் காத்திருக்க தேவையில்லை.
பிரார்த்தனைகளை நம் வாழ்வில் ஒரு நிரந்தரமான , ஆக்கபூர்வமான அமசமாக இருக்கும்படி நம்மால் செய்யமுடியும். பிரார்த்தனைகள் மூலமாக வெற்றிகளை கொண்டுவரமுடியும் .ஆரோக்கியத்தை கொண்டுவரமுடியும் , உறவுகளை மேம்படுத்த முடியும் , மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வாழ்வில் எல்லாநேரங்களிலும் கொண்டுவரமுடியும்..
நம் வேண்டுதல்களை சக்திமிக்கதாக ஆக்குகின்ற ஆற்றல்கள் உலகளாவியவை.. அந்த எல்லையில்லா இறைநிலை , அருபெருங்கருணை , முடிவில்லா பேரரறிவு நம்முடைய வேண்டுதல்களுக்கு செயல்விடை அளிக்கும்படி செய்வது ஒரு குறிப்பிட்ட உத்தியோ அல்லது பிரார்த்தனை செயல்முறையோ மட்டுமல்ல | நம்முடைய நம்பிக்கையின்படி நம் வேண்டுதல்களுக்கு விடையளிக்கப்படும் " என்பதுதான் உண்மை ..
நாம் எதை செய்து கொண்டிருக்கிறோம் அதை ஏன் செய்து கொண்டிருக்கிறோம் என்ற புரிதலின் அடிப்படையில் அமைந்திருக்கும் ஓர் உத்தி , நம்முடைய உள்ளார்ந்த விருப்பங்களை நிறைவேற்றுவதில் பெருமளவு உதவும்..
நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறோம் ஏனென்றால் நம் ஆழ்விருப்பம்தான் பிரார்த்தனை , ஆரோக்கியம் , மகிழ்ச்சி , பாதுகாப்பு , மன அமைதி மற்றும் பல நல்ல விஷயங்களை நாம் மிகவும் ஆழமாக விரும்புகிறோம்..ஆனால் நம்மில் பலர் தெளிவாக வரையறுக்கப்பட்ட விளைவுகளை பெற தவறி விடுகிறோம் . காரணம் நாம் நம் பிரார்த்னைகளை தெளிவாக வரையறுப்பதில்லை ..அதை நம் பிரார்த்தனைகளில் வரையறுக்க வேண்டும்.
நம்பிக்கை விதிதான் வாழ்க்கை விதி அதுதான் ஈர்ப்புவிதி . உங்கள் மனதில் இருக்கும் ஒரு எண்ணம்தான் நம்பிக்கை . நாம் என்ன சிந்திக்கிறோமோ எவ்வாறு உணர்கிறோமோ எதை நம்புகிறோமோ அதுபோலவே நம் மணமும் உடலும் சூழல்களும் மாறுகின்றது ..
தெளிவாக வரையறுக்கப்பட்ட பிரார்த்தனைகளை வேண்டுதல்களை அந்த அருட்பேராற்றல் , முடிவில்லா பேரரறிவிடம் நன்றியுணர்வுடன் செலுத்தி நல்ல விளைவுகளை பெறுங்கள்..
ஈர்ப்பு விதியை பயன்படுத்துவதில் பிரார்த்தனை உத்தி ஒரு முக்கியமான உத்தியாகும் ..
நன்றியுடனும் அன்புடனும்
வாழ்க வையகம் .. வாழ்க வளமுடன்..
Positive thinking makes you feel better...
No comments