TNPSC GROUP-II, TNPSC GROUP-IV, TNTET , PGTRB கேள்வி பதில்கள் - தாள் 5 10ம் வகுப்பு பொதுத் தமிழ் இயல் ஒன்று மொழி -தமிழ் சொல்வளம்




TNPSC GROUP-II, 

TNPSC GROUP-IV,

    TNTET , PGTRB 

       கேள்வி பதில்கள் - தாள் 5

 10ம் வகுப்பு பொதுத் தமிழ்

  இயல் ஒன்று மொழி -தமிழ் சொல்வளம் 


 41)'நுனியில் சுருங்கிய காய்' எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

  * சூம்பல் 

 42) "நுனியில் சுருங்கிய பழம்" எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  * சிவியல்  

 43) குளுகுளுத்த பழம் - அளியல்

 44) 'தேரை அமர்ந்திருந்ததால் கெட்ட தேங்காய்' எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 * அல்லிக்காய்

 45) தென்னையில் கெட்ட  காய் - ஒல்லிக்காய்   

 46) பொருத்துக ;(விடை)

 i) தொலி - மிக மெல்லியது

 ii) தோல் - திண்ணமானது 

 iii) தோடு - வன்மையானது

 iv) ஓடு - மிக வன்மையானது

 v) குடுக்கை - சுரையின் ஓடு

 47) 'உமி' என்பது ?

  * நெல், கம்பு முதலியவற்றின் மூடி

 48) வரகு, கேழ்வரகு முதலியவற்றின் ' உமி' எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 * கொம்மை

 49) நெல் ,புல் (கம்பு )முதலிய தானியங்களுக்கு வழங்கப்படும் பெயர்?

  * கூலம்

 50) அவரை, உளுந்து போன்ற தானியங்களை வழங்கும் சொல்?
 
 * பயிறு 

 51) கத்தரி, மிளகாய் முதலியவற்றின்  'வித்து' எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

   * விதை

 52) "காஞ்சிரை" என்பது ?

    * ஒரு வகை 'நச்சு மரம்'

 53) புளி , காஞ்சிரை முதலியவற்றின் 'வித்து' எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 * காழ்

 54) 'முத்து' என்பது?

   * வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து 

 55) மா, பனை முதலியவற்றின் வித்து ?

  * கொட்டை

 56) தென்னையின் வித்து - தேங்காய்

 57) அவரை துவரை முதலிய பயிர்கள் - முதிரை

 58) நெல், கத்தரி முதலியவற்றின் 'இளநிலை' எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

  * நாற்று

 59) மா, புளி, வாழை முதலியவற்றின் 'இளநிலை' எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 * நாற்று

 60) வாழையின் இளநிலை - குருத்து 

 61) தென்னையின் இளநிலை - பிள்ளை

 62) விளாவின் இளநிலை - குட்டி

 63) 'பனையின்' இளநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

 * மடலி அல்லது வடலி

 64) நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 * பைங்கூழ்

 65) "மொழிஞாயிறு" என்று அழைக்கப்பட்டவர் யார்?

   *தேவநேய பாவணர்  

 66) "சொல்லாய்வுக் கட்டுரைகள்" நூலில் உள்ள தமிழ் சொல் வளம் என்னும் கட்டுரையின் ஆசிரியர்?

  *தேவநேய பாவணர்

 67) உலகத் தமிழ் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் யார்?

     * தேவநேய பாவணர்

 68) தேவநேயப் பாவாணரின் பணி?

  * அகரமுதலி திட்ட இயக்குனர்

 69) போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகர்?

 * லிஸ்பன்

 70) "கார்டிலா" என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு?

  * கிபி 1554

 71) இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி?

 * தமிழ்

 72) 'கார்டிலா' நூலைப் பற்றி கூறிய மலர்? 

  * ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

 











 

No comments

Powered by Blogger.